For Thala Thalapathy Fans



Monday, October 17, 2011

பில்லா 2 சூட்டிங்கில் அஜித்துக்கு ரத்த காயம்

பில்லா 2 படத்தின் சூட்டிங்கில் நடிகர் அஜித்துக்கு கைகளில் ரத்த காயம் ஏற்பட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வருகிறார். அஜித் ஆசை ஆசையாக நடித்து வரும் படம் பில்லா -2. பில்லா படத்தின் தாறுமாறான ஹிட்டுக்கு பிறகு மீண்டும் அதே சப்ஜெக்ட்டில் நடிக்க ஆசைப்பட்டார் அஜித். அதன் விளைவாக உருவாகி வளர்ந்து கொண்டிருக்கும் படம்தான் இந்த பில்லா-2. இப்படத்தை சக்ரி டோலட்டி இயக்கிக் கொண்டிருக்கிறார். படத்தில் அஜித் ஜேடியாக பார்வதி ஒமணக்குட்டன் நடித்து வருகிறார்.

விறுவிறுப்பாக நடந்து வரும் சூட்டிங்கில் கடந்த சில தினங்களாக சண்டை காட்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கோவாவில் நடைபெறும் இந்த சூட்டிங்கின்போது அஜித்துக்கு அடிபட்டு கைகள் கிழிந்து ரத்தம் கொட்டியது. ஐஸ்வாட்டர் பாட்டில் ஒன்றால் எதிரியின் தலையில் அடிப்பது போல காட்சி. அது டம்மி பாட்டில்தான் என்றாலும் வாகாக அடிக்கவில்லை என்றால் கையை கிழிக்கும் அபாயம் இருந்தது. ஜாக்கிரதையாகவே இந்த காட்சியை அணுகிய அஜித், எதிர்பாராத விதமாக பாட்டில் உடைந்து கைகளை கிழித்துக் கொண்டார். ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அஜித், தற்போது ஓய்வு எடுத்து வருகிறாராம்.

No comments:

Post a Comment