ஒருவழியாக அஜித் அடுத்து நடிக்கவிருப்பது விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில்! இது கிட்டத்திட்ட உறுதியாகிவிட்டதாகச் சொல்கிறார்கள், அஜித் அடுத்து நடிக்கும் படத்தை தயாரிக்க இருக்கும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் அலுவலக வட்டாரத்தில். இதை உறுதிபடுத்தும் விதமாக விஷ்ணுவர்த்தனும் தனது ‘பஞ்சா’ தெலுங்குபட வேலைகளுக்கு மத்தியில் ரத்னம் அலுவலகத்துக்கு விசிட் அடித்து, தயாரிப்பாளருடன் ஒரு மணிநேரம் உரையாடிச் சென்றிருகிறாராம்!
இன்னொருபக்கம் விஷ்னுவுக்கும் தனக்குமான நட்பின் நெருக்கத்தை தனது குரல் மூலம் உறுதிபடுத்தி விட்டார் அஜித்! அஜீத் ‘பில்லா இரண்டாம் பாகம்’ படத்தில் படு பிசியாக இருக்கிறார். அதே போல இயக்குனர் விஷ்ணுவர்தன் சிரஞ்சீவி தம்பியை வைத்து ‘பஞ்சா’ என்னும் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
இந்த படத்தை தமிழில் டப் செய்கிறார் விஷ்ணுவர்தன். ஹீரோ பவன் கல்யாணுக்கு தமிழில் குரல் கொடுக்க யாரை அணுகலாம் என்று யோசித்த அவருக்கு சட்டென்று நினைவுக்கு வந்தது நம்ம ‘தல’ தான்.
‘பில்லா இரண்டாம் பாகம் படத்தை முதலில் இயக்க இருந்து பின்னர், விஷ்னுவர்த்தன் விலகினாலும், அவருக்கும், அஜீத்துக்கும் இடையேயான நட்பு அப்படியே இருக்கிறது யார் கண்ணும் படாமல். இதனால் கொஞ்சமும் தயங்காமல் அஜீத்தை அணுகி பவன் கல்யாணுக்கு கொஞ்சம் குரல் கொடுங்களேன் என்று கேட்க அவரும் ஓகே சொல்லிவிட்டாராம்.
No comments:
Post a Comment