For Thala Thalapathy Fans



Saturday, June 16, 2012

யோஹனில் களமிறங்குகிறார் இளைய தளபதி ..,,..


விஜய் நடிப்பில் “யோஹன் அத்தியாயம் ஒன்று” திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஜூலையில் தொடங்கும் என்று அப்படத்தின் இயக்குனர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார்.
இளைய தளபதி சர்வதேச ஏஜெண்டாக யோஹனில் களமிறங்குகின்றார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவதையும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் படமாக்க கௌதம் திட்டமிட்டுள்ளார்.

தற்போது கௌதம் இயக்கிவரும் நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தின் பாடல் வெளியீடு ஜூலை முதல் வாரத்தில் வெளியாகின்றது.

இப்படம் ஓகஸ்டு அல்லது செப்ரெம்பர் மாதத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் யோஹன் படப்பிடிப்புகளில் தீவிரமாக களமிறங்கப்போகின்றார் கௌதம். இப்படம் விஜய்க்கும் கௌதமுக்கும் மற்றொரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதுமட்டுமின்றி ஜெய் மற்றும் ரிச்சா நடிப்பில் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற படத்தையும், தங்க மீன்கள் என்ற திரைப்படத்தையும் தயாரித்து வருவதாகவும் கவுதம் கூறியுள்ளார்.

பில்லா-2க்கு 'A' சான்றிதழ் ...///


திரையுலக ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் தல அஜித்தின் பில்லா-2 படத்திற்கு திரைப்பட தணிக்கைத்துறை 'A' சான்றிதழ் வழங்கியுள்ளது.
ஒரு வழியாக சென்சார் முடிந்தாலும் படம் வெளியீடு எப்போது என்பதில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது.


நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வந்த 'பில்லா 2', ஜுன் 22ம் திகதி வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் இன்னும் இழுபறி நீடிப்பதாக தெரிகிறது.


படத்தினை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு A சான்றிதழ் அளித்து இருக்கிறார்கள்.


அதுமட்டுமன்றி படத்தில் ஒரு சில காட்சிகளை நீக்க சொல்லி இருக்கிறார்கள். A சான்றிதழ் இருந்தால் படத்திற்கு வரிவிலக்கு கிடைக்காது. இதைப்பற்றி எல்லாம் தயாரிப்பாளர் கவலைப்படவில்லை.


இன்றைய திகதிக்குள் படம் எப்போது வெளிவரும் என்பது தெரியவரும். 


படத்தின் படப்பெட்டிகள் தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கும்.


பணிகள் எதுவும் தொய்வு இல்லையென்றால் படம் 21ம் திகதி கண்டிப்பாக வெளியாகும். தொய்வு ஏற்பட்டால் படம் 28ம் திகதி தான் வெளியீடு என்று கூறுகிறது படக்குழு.

பாலிவுட்டில் ரீமேக் ஆகும் துப்பாக்கி ...


ஏ.ஆர்.முருகதாஸ் தான் இயக்கும் துப்பாக்கி படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடிவெடுத்துள்ளார்.
கொலிவுட்டில் இளையதளபதி விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி படத்தில் நடித்து வருகின்றார்.


தற்போது துப்பாக்கி படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.


இந்நிலையில் படப்பிடிப்புகள் முடிவதற்கும் துப்பாக்கியை இந்தியில் ரீமேக் செய்ய களமிறங்கியுள்ளார்.


இந்தியில் விஜய் நடிக்கும் வேடத்தில் அக்ஷய் குமார் நடிப்பார் எனத் தெரிகிறது. ஏனெனில் அக்ஷய் நடித்து இந்தியில் வெளியான “ரவுடி ரத்தோர்” ஹிட்டானதால் இந்த முடிவு எடுத்தார். 


ஏற்கனவே கொலிவுட்டில் வெளியான கஜினி, இந்தியில் அமீர்கானை வைத்து ரீமேக் ஆகி சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

சண்டை காட்சியில் விஜய் காயம் ...


துப்பாக்கி படப்பிடிப்பில் சண்டை காட்சியில் நடித்த விஜய்க்கு முட்டியில் காயம் ஏற்பட்டதால், லண்டனில் சிகிச்சை பெறுகிறார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் துப்பாக்கி.
சமீபத்தில் இதன் படப்பிடிப்பு மும்பையில் நடந்தது. சண்டை காட்சிகளை படமாக்கிக் கொண்டிருந்தார் இயக்குனர்.
உயரமான இடத்திலிருந்து விஜய் குதிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. உயரத்தில் இருந்து விஜய் குதித்த வேகத்தில் அவரது கால் இடறியது. இதில் தரையில் அவர் கால்மோதி முட்டியில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்தார்.
இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. தற்போது விஜய் குடும்பத்தினருடன் லண்டன் சென்றிருக்கிறார். அங்குள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெறுகிறார்.
இதுபற்றி முருகதாஸ் கூறும்போது, சண்டை காட்சி படமாக்கிக் கொண்டிருந்த போது, இந்த விபத்து ஏற்பட்டது. உயரத்தில் இருந்து குதித்த போது கால் இடறி காயம் ஏற்பட்டது. எதிர்பாராத விதமாக இந்த சம்பவம் நடந்தது.
கால் முட்டியில் வழக்கமாக அணியும் பாதுகாப்பு கவசத்தை அவர் அணியாமல் நடித்தது தான் இதற்கு காரணம். ஆனாலும் குறிப்பிட்ட காட்சியை வலியோடு செய்து முடித்தார். காயத்துக்காக லண்டனில் சிகிச்சை பெறுகிறார் என்றார்.
இன்னும் 4 நாள் படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது. லண்டனில் இருந்து விஜய் திரும்பியவுடன் அதில் நடிக்கிறார். இதையடுத்து கௌதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

நான் வாழும் வாழ்க்கைக்கு “தல” தான் காரணம்: ஏ.ஆர்.முருகதாஸ் ...


கொலிவுட்டில் சிறந்த இயக்குனராக நான் வலம் வருகிறேன் என்றால், அதற்கு அஜித் குமார் தான் காரணம் என்று ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார்.
கடந்த 2001ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் அஜித் நடித்து தீனா என்ற படம் திரைக்கு வந்தது.


இப்படம் ஏ.ஆர்.முருகதாசுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தற்போது முருகதாஸ் கொலிவுட், பாலிவுட் என வெற்றிப்படங்களை தந்துகொண்டிருக்கிறார்.


இந்நிலையில் முருகதாஸ் தன்னுடைய பேட்டியில், பாலிவுட்டில் என்னை ஒரு வெற்றி இயக்குனராக ஏற்க கஷ்டப்படுகின்றார்கள்.


இதை விட என்னுடைய நிலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, எப்படி இருக்கும் என்பதை நினைத்துப்பாருங்கள். ஆனால் அப்போது அஜித் என்னை ஆதரித்தார்.


நானும் அவரும் தீனாவில் பணியாற்றினோம். இன்று நான் என்னுடைய 7வது படத்தை திரைக்கு கொண்டுவரப்போகிறேன்.


இயக்குனர் என்ற இந்த என்னுடைய வாழ்க்கைக்கு அஜித்குமார் தான் காரணம் என்று கூறியுள்ளார்.

Friday, June 1, 2012

அஜித்-ஆர்யா இணையும் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியது ...


இவ்வருடத்தின் பிரமாண்ட படைப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிற அஜித்-ஆர்யா இணையும் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
இப்படத்தை சத்ய சாய் மூவிஸ் சார்பில் ஏ.ரகுராம் தயாரிக்கின்றார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் உள்ள விஸ்வரூப ஷீரடி சாய்பாபா மந்திரில் இன்று தொடங்கியது.


படத்தின் மற்றொரு நாயகனான ஆர்யா இதில் கலந்து கொண்டார்.


இதுகுறித்து படக்குழுவினர், சாய்பாபாவின் உகந்த தினமான வியாழக்கிழமையில் படப்பிடிப்பு தொடங்குவது விஷேசமானது என தெரிவித்தனர்.


இயக்குனர் விஷ்ணுவர்தன், ஒளிப்பதிவாளர் பி.எஸ்.வினோத், கதையாசிரியர் சுபா, படத்தொகுப்பாளர் நானி, உடை அலங்கார நிபுணர் அனு வர்த்தன் ஆகியோருடன் ஏ.எம். ரத்னம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.


இப்படத்தின் ஆரம்ப கட்ட படப்பிடிப்பு ஜுன் 2ம் திகதி மும்பையில் தொடங்கி 26 நாட்கள் நடைபெற உள்ளது.
நாயகிகளாக நயன்தாரா, தாப்ஸி நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார்.
 

அஜித்துடன் ஜோடி சேர்கிறார் அனுஷ்கா ...


பில்லா-2க்கு பிறகு தல அஜீத், விஷ்ணுவர்தன், 'சிறுத்தை' சிவா ஆகியோரது இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
விஷ்ணுவர்தன் படம் ஜுன் மாதம் தொடங்க இருக்கிறது. அதற்குள் 'சிறுத்தை' சிவா படத்தினைப் பற்றிய தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளன.


அஜித்குமார்-விஷ்ணு இணையும் படத்தில் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தமாகியிருக்கின்றார்.


ஆனால் சிறுத்தை சிவா-அஜித் இணையும் படத்திற்கான நாயகி அறிவிப்பு இதுவரை வெளி வரவில்லை. தற்போது அஜித்திற்கு ஜோடியாக அனுஷ்காவிடம் பேசி வருவதாக சிவா கூறியுள்ளார்.


தெலுங்கு ரீமேக் ஆக இருந்தாலும் 'சிறுத்தை' படத்தின் மூலம் கார்த்தியை விநியோகஸ்தர்கள் மத்தியில் வரவேற்புக்குள்ளாக்கியர் சிவா.
படத்தின் வசூல் மழையால் தமிழ் திரையுலகில் 'சிறுத்தை' சிவா என்ற அடைமொழியோடு இவரையும் அழைக்க தொடங்கினார்கள்.

அஜீத்தின் புகழ் பாடும் ஆர்யா ...///


அஜீத் குமார் புகழ் பாடும் நடிகர்கள் பட்டியிலில் புதிதாக இணைந்திருப்பவர் ஆர்யா.
அஜீத் குமாரை வைத்து இயக்குனர் விஷ்ணுவர்தன் எடுக்கும் படத்தில் ஆர்யாவும் நடிக்கிறார்.
அவருக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் நடிக்க ஆர்யா ஓவர் ஆர்வமாக உள்ளார்.
இந்நிலையில் அஜீத் குறித்து ஆர்யா கூறுகையில், எனக்கு அஜீத் படங்கள் மிகவும் பிடிக்கும். அவருக்கு ஈகோவே கிடையாது.
மங்காத்தா நடிகர்களுடன் அவர் பழகிய விதத்தை பார்க்க வேண்டுமே. அவர் டெக்னீஷயன் முதல் சக நடிகர்கள் வரை அனைவரையும் சரிசமமாக பார்ப்பார்.
எனது பிறந்தநாளைக்கு எனக்கு வாழ்த்து கூறினார். நம் கூட்டணி சிறப்பாக இருக்கப் போகிறது என்று அவர் என்னிடம் தெரிவித்தார்.
விஷ்ணுவர்தன் எனக்கு நல்ல நண்பர். அவர் கேட்டால் நான் அவருக்காக துணை நடிகராகக் கூட நடிக்க தயங்க மாட்டேன் என்று தெரிவித்தார்.

லக்ஷ்மி ராயின் ஆசையை நிறைவேற்றிய விஜய் ...


இளைய தளபதியுடன் நடிக்க வேண்டும் என்ற லக்ஷ்மி ராயின் ஆசையை இயக்குனர் விஜய் நிறைவேற்றியுள்ளார்.
சீயான் விக்ரமை வைத்து தாண்டவம் படத்தை எடுத்துக் கொண்டிருக்கும் இயக்குனர் விஜய் அடுத்ததாக இளைய தளபதி விஜயை வைத்து தலைவன் படத்தை இயக்குகிறார்.
தாண்டவம் படத்தில் நடித்து வரும் லக்ஷ்மி ராய் தனது நீண்ட நாள் ஆசை ஒன்றை இயக்குனர் விஜயிடம் தெரிவித்துள்ளார். 
அதை கேட்ட விஜய் உடனே அவரது ஆசையை நிறைவேற்றி விட்டாராம்.


இளைய தளபதியுடன் நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையைத் தான் லக்ஷ்மி ராய் தெரிவித்துள்ளார். அதற்கு விஜய் தான் எடுக்கும் தலைவன் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் தருவதாக வாக்களித்துள்ளார்.
தாண்டவம் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக அனுஷ்கா, ஏமி ஜாக்சன் இருக்கையில் லக்ஷ்மிராய் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.


இந்த படத்தில் தான் விக்ரமை காதலிக்காவிட்டாலும் தன்னுடைய கதாபாத்திரம் பேசப்படும் என்று நம்பிக்கையுடன் பணியாற்றுகிறார்.