இவ்வருடத்தின் பிரமாண்ட படைப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிற அஜித்-ஆர்யா இணையும் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. |
இப்படத்தை சத்ய சாய் மூவிஸ் சார்பில் ஏ.ரகுராம் தயாரிக்கின்றார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் உள்ள விஸ்வரூப ஷீரடி சாய்பாபா மந்திரில் இன்று தொடங்கியது. படத்தின் மற்றொரு நாயகனான ஆர்யா இதில் கலந்து கொண்டார். இதுகுறித்து படக்குழுவினர், சாய்பாபாவின் உகந்த தினமான வியாழக்கிழமையில் படப்பிடிப்பு தொடங்குவது விஷேசமானது என தெரிவித்தனர். இயக்குனர் விஷ்ணுவர்தன், ஒளிப்பதிவாளர் பி.எஸ்.வினோத், கதையாசிரியர் சுபா, படத்தொகுப்பாளர் நானி, உடை அலங்கார நிபுணர் அனு வர்த்தன் ஆகியோருடன் ஏ.எம். ரத்னம் கலந்து கொண்டு சிறப்பித்தார். இப்படத்தின் ஆரம்ப கட்ட படப்பிடிப்பு ஜுன் 2ம் திகதி மும்பையில் தொடங்கி 26 நாட்கள் நடைபெற உள்ளது. நாயகிகளாக நயன்தாரா, தாப்ஸி நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். |
For Thala Thalapathy Fans
Friday, June 1, 2012
அஜித்-ஆர்யா இணையும் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியது ...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment