ஒரு வழியாக சென்சார் முடிந்தாலும் படம் வெளியீடு எப்போது என்பதில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது.
நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வந்த 'பில்லா 2', ஜுன் 22ம் திகதி வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் இன்னும் இழுபறி நீடிப்பதாக தெரிகிறது.
படத்தினை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு A சான்றிதழ் அளித்து இருக்கிறார்கள்.
அதுமட்டுமன்றி படத்தில் ஒரு சில காட்சிகளை நீக்க சொல்லி இருக்கிறார்கள். A சான்றிதழ் இருந்தால் படத்திற்கு வரிவிலக்கு கிடைக்காது. இதைப்பற்றி எல்லாம் தயாரிப்பாளர் கவலைப்படவில்லை.
இன்றைய திகதிக்குள் படம் எப்போது வெளிவரும் என்பது தெரியவரும்.
படத்தின் படப்பெட்டிகள் தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கும்.
பணிகள் எதுவும் தொய்வு இல்லையென்றால் படம் 21ம் திகதி கண்டிப்பாக வெளியாகும். தொய்வு ஏற்பட்டால் படம் 28ம் திகதி தான் வெளியீடு என்று கூறுகிறது படக்குழு. |
No comments:
Post a Comment