பில்லா-2க்கு பிறகு தல அஜீத், விஷ்ணுவர்தன், 'சிறுத்தை' சிவா ஆகியோரது இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
விஷ்ணுவர்தன் படம் ஜுன் மாதம் தொடங்க இருக்கிறது. அதற்குள் 'சிறுத்தை' சிவா படத்தினைப் பற்றிய தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளன.
அஜித்குமார்-விஷ்ணு இணையும் படத்தில் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தமாகியிருக்கின்றார்.
ஆனால் சிறுத்தை சிவா-அஜித் இணையும் படத்திற்கான நாயகி அறிவிப்பு இதுவரை வெளி வரவில்லை. தற்போது அஜித்திற்கு ஜோடியாக அனுஷ்காவிடம் பேசி வருவதாக சிவா கூறியுள்ளார்.
தெலுங்கு ரீமேக் ஆக இருந்தாலும் 'சிறுத்தை' படத்தின் மூலம் கார்த்தியை விநியோகஸ்தர்கள் மத்தியில் வரவேற்புக்குள்ளாக்கியர் சிவா. படத்தின் வசூல் மழையால் தமிழ் திரையுலகில் 'சிறுத்தை' சிவா என்ற அடைமொழியோடு இவரையும் அழைக்க தொடங்கினார்கள்.
No comments:
Post a Comment