விஜய் நடிப்பில் “யோஹன் அத்தியாயம் ஒன்று” திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஜூலையில் தொடங்கும் என்று அப்படத்தின் இயக்குனர் கௌதம் மேனன் தெரிவித்துள்ளார். |
இளைய தளபதி சர்வதேச ஏஜெண்டாக யோஹனில் களமிறங்குகின்றார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவதையும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் படமாக்க கௌதம் திட்டமிட்டுள்ளார். தற்போது கௌதம் இயக்கிவரும் நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தின் பாடல் வெளியீடு ஜூலை முதல் வாரத்தில் வெளியாகின்றது. இப்படம் ஓகஸ்டு அல்லது செப்ரெம்பர் மாதத்தில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் யோஹன் படப்பிடிப்புகளில் தீவிரமாக களமிறங்கப்போகின்றார் கௌதம். இப்படம் விஜய்க்கும் கௌதமுக்கும் மற்றொரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதுமட்டுமின்றி ஜெய் மற்றும் ரிச்சா நடிப்பில் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற படத்தையும், தங்க மீன்கள் என்ற திரைப்படத்தையும் தயாரித்து வருவதாகவும் கவுதம் கூறியுள்ளார். |
For Thala Thalapathy Fans
Saturday, June 16, 2012
யோஹனில் களமிறங்குகிறார் இளைய தளபதி ..,,..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment