அஜீத் குமாரை வைத்து இயக்குனர் விஷ்ணுவர்தன் எடுக்கும் படத்தில் ஆர்யாவும் நடிக்கிறார்.
அவருக்கு ஜோடியாக டாப்ஸி நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் நடிக்க ஆர்யா ஓவர் ஆர்வமாக உள்ளார்.
இந்நிலையில் அஜீத் குறித்து ஆர்யா கூறுகையில், எனக்கு அஜீத் படங்கள் மிகவும் பிடிக்கும். அவருக்கு ஈகோவே கிடையாது.
மங்காத்தா நடிகர்களுடன் அவர் பழகிய விதத்தை பார்க்க வேண்டுமே. அவர் டெக்னீஷயன் முதல் சக நடிகர்கள் வரை அனைவரையும் சரிசமமாக பார்ப்பார்.
எனது பிறந்தநாளைக்கு எனக்கு வாழ்த்து கூறினார். நம் கூட்டணி சிறப்பாக இருக்கப் போகிறது என்று அவர் என்னிடம் தெரிவித்தார்.
விஷ்ணுவர்தன் எனக்கு நல்ல நண்பர். அவர் கேட்டால் நான் அவருக்காக துணை நடிகராகக் கூட நடிக்க தயங்க மாட்டேன் என்று தெரிவித்தார். |
No comments:
Post a Comment