For Thala Thalapathy Fans



Monday, January 30, 2012

ஓஸ்கர் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத் ....


ஓஸ்கர் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஓர் புதிய திரைப்படத்தில் அல்டிமேட் ஸ்டார் அஜீத் நடிக்கவுள்ளார்.
பில்லா 2 திரைப்படத்தில் தற்போது மிகவும் மும்மரமாக நடித்து வருகிறார் நடிகர் அஜீத்.


இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு ஓஸ்கர் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஓர் புதிய திரைப்படத்தில் அஜீத் நடிக்கவுள்ளார்.
இப்படத்திற்கு தலைவன் இருக்கிறான் என்று பெயரிட்டுள்ளனர்.


தெலுங்கு ஸ்டார் ரவிதேஜா, உலக நாயகன் கமலஹாசன் ஆகியோர் இத்திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் நடிக்கவுள்ளனர்.


தலைவன் இருக்கிறான் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதலில் உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்திற்கு தலைவன் இருக்கிறான் என்ற தலைப்பு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Saturday, January 28, 2012

நண்பன் படத்துக்கு பிறகு சம்பளத்தை உயர்த்திய இலியானா ..........


நண்பன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இலியானா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார்.
தென்னிந்திய படங்களில் நடிப்பதோடு பாலிவுட் படத்திலும் இலியானா நடித்து வருகிறார்.


இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான நண்பன் படத்தில் விஜய் உடன் இலியானா இணைந்து நடித்துள்ளார்.


இந்நிலையில் நண்பனின் வெற்றியைத் தொடர்ந்து இலியானா தனது சம்பளத்தை உயர்த்தியிருப்பதாக கொலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது.


நண்பன் படத்தில் நடிக்கும் போதே அதிகம் சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகை என்று இலியானா பரபரப்பாக பேசப்பட்டார். கடந்த இரண்டு வருடங்களாக கோடிக்கு குறைவாக இலியானா சம்பளம் வாங்குவதில்லை என்று பட புள்ளிகள் கூறுகிறார்கள்.


இலியானா படப்பிடிப்பில் கலந்து கொள்ளும்போது கூடவே ஆறு நபர்கள் அடங்கிய குழு அவருக்கு தேவையானதை செய்து தர காத்திருக்கும்.
படப்பிடிப்புக்கு இலியானா விமானத்தில் தான் வந்து செல்வார். ஐந்து நட்சத்திர விடுதியில் தான் தங்குவார். அதனால் பெரிய படத்தயாரிப்பாளர் மட்டுமே இலியானாவை நெருங்க முடியும் என்கிறது பட வட்டாரம்.

Thursday, January 26, 2012

VIJAY THANKS TO ALL ONLINE FANSSSSSSS::::


என் ஃபிரண்ட போல யாரு மச்சான் வெற்றி: விவேகா மகிழ்ச்சி ...


நண்பன் திரைப்படத்தில் வெளியான என் ஃபிரண்ட போல யாரு மச்சான் பாடல் வெற்றி பெற்ற நிலையில் அதன் ஆசிரியர் விவேகா சந்தோசமாக இருக்கிறார்.
காதலைப் பற்றிப் பேச விவாதிக்க கொண்டாட குறிப்பிட்ட வயது என்கிற தகுதி தேவைப்படும். ஆனால் நட்பைப் பற்றிப் பேசவும் கொண்டாடவும் வயது வரம்பு தேவையில்லை.


அதனால் தான் இன்று `என் பிரண்டைப் போல போல யாரு மச்சான்` பாடல் பட்டி தொட்டியெல்லாம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது.



இந்த ‘நண்பன்’ படப்பாடல் நட்பு வட்டங்களில் நண்பர்கள் உலகத்தில் தேசிய கீதமாகிவிட்டது. நண்பர்களின் உரையாடல்கள், குறுஞ்செய்தி, காலர்ட்யூன், நெட் ஒர்க் விளம்பரம், ஃபேஸ்புக் என்று இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் கொண்டாடி வருகிறார்கள்.


தங்கள் பால்ய கால நினைவுகளில் மூழ்கி, நட்பை உணர்ந்து மகிழ்கிறார்கள். இப்படி ஒரு வெற்றியையும் கொண்டாட்டத்தையும் கொண்ட பாடலை எழுதியிருக்கும் கவிஞர் விவேகாவே எதிர் பார்க்கவில்லை.


வருடத்தின் மிகப்பெரிய வெற்றிப் பாடலாக ‘என் ஃப்ரண்ட போல யாரு மச்சான்’ பாடல் அமைந்துள்ளது.


இந்த வரலாறு காணாத குளிர் காலச் சூழலில் மகிழ்ச்சியின் வெப்பத்தையே போர்வையாக்கிக் கொண்டிருக்கிற விவேகா இந்த அனுபவம் பற்றி கூறும் போது, “நண்பன் பெரிய படம். சங்கர் மாபெரும் இயக்குனர். அவர் பெயரை சொன்னாலே அகில இந்திய வியாபாரம் ஆகிவிடும் அந்த அளவுக்கு வணிக மதிப்புள்ள இயக்குனர்.


அதே போல் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ஒவ்வொரு பாடலையும் வெற்றிப் பாடலாகக் கொடுத்து உச்சத்தில் இருப்பவர்.


விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா, சத்யராஜ், இலியானா போன்ற நட்சத்திர பலம் இப்படி இயல்பாகவே படத்தின் பிரம்மாண்டம் பெரிதாகிவிட்டது. படத்தில் நான் எழுதிய பாடலுக்கு இந்த பெருமையான பிரம்மாண்ட வெளிச்சம் பல மடங்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.


இது தான் உண்மை. அதற்காக இந்த பாடலை எழுத வாய்ப்பளித்த இயக்குனர் திரு ஷங்கர் அவர்களுக்கும், திரு ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

சத்யராஜின் ஆசை .............


இளையதளபதி விஜய் கன்னத்தை கிள்ளிப் பார்க்க ஆசைப்படுவதாக சத்யராஜ் கூறியுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் இளையதளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் ஆகியோர் நடித்திருக்கும் நண்பன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

சமீபத்தில் நண்பன் திரைப்படத்திற்கான சிறப்பு நிகழ்ச்சி ஒன்று விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது.
இந்நிகழ்ச்சியில் இளையதளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், ஷங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது நடிகர் சத்யராஜ் பேசியதாவது, நாட்டின் தலைசிறந்த நடிகர் அமீர்கான். திரி இடியட்ஸ் திரைப்படத்தில் அமீர்கானின் நடிப்பை விட நண்பனில் விஜய்யின் நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

மேலும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை போல விஜய் அழகான நடிகராக திகழ்கிறார். அவருடைய கன்னத்தை கிள்ளிப்பார்க்க நான் அவ்வப்போது ஆசைப்படுவேன் என்று கூறியுள்ளார்.

நண்பன் திரைப்படத்தில் நடித்தது எனக்கு அதிகமான சந்தோஷத்தை அளித்துள்ளதாகவும் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு போக்கிரி திரைப்பட விழாவில் இந்தியாவின் புருஸ்லி என்று விஜய்யை சத்யராஜ் புகழ்ந்தது குறிப்பிடத்தக்கது

Wednesday, January 25, 2012

நண்பன் திரைப்படத்தில் என்னுடைய பாணியில் நடித்தேன்: இலியானா ...


நண்பன் திரைப்படத்தில் கரினா கபூர் பாணியை பின்பற்ற வில்லை என்று இலியானா தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் நண்பன் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நாயகி இலியானா நடித்துள்ளார்.


நண்பன் திரைப்படத்தை பற்றி நாயகி இலியானா, நண்பன் படம் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. நிறைய பாராட்டுகளும் குவிகிறது.


பாலிவுட்டில் வெளியான 3 இடியட்ஸ் படத்தின் தமிழாக்கமே நண்பன் என்றாலும் படத்தில் நடிப்பதற்காக 3 இடியட்ஸ் படத்தை பல தடவை பார்த்தேன். ஆனால் அதில் நடித்த கரீனா கபூர் நடிப்பை காப்பி அடித்து நடிக்க வில்லை.


கரினா கபூர் பாணி வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். என் நண்பர்கள் கரீனா கபூருடன் ஒப்பிட்டு பேசவில்லை. என் பாணியில் நடித்திருப்பதாக என்னை பாராட்டினார்கள்.


கொலிவுட்டில் கேடி படத்துக்கு பின் 5 ஆண்டுகளுக்கு பின்பு நல்ல கதை அமைந்ததால் நண்பனில் நடித்தேன்.
இயக்குனர் ஷங்கருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். அவர் திறமையானவர். அனுஷ்கா உட்பட சக நடிகைகளிடம் இருந்து பாராட்டு கிடைத்தது மகிழ்ச்சி அளித்தது என்று தெரிவித்துள்ளார்.

Vijay on Sameera's wish list.........

Sameera Reddy, the pan-Indian actress that she is, is busy shuttling between Chennai, Hyderabad, Mumbai and Kolkata to honour her professional commitments. Happy with the response to her recent Tamil release 'Vettai'; she has expressed a longtime wish of her. I am waiting to stand in front of the camera with Rajini sir at least once. Also, it is my wish to shake legs with Ilayathalapathy Vijay in a fast-paced dance sequence. I hope both my wishes would come true soon," says the 'Vaaranam Aayiram' girl. On how she manages acting in films in different languages, Sameera says, "Language is not a barrier. As an actress, all that I need to do is get the emotions right when the camera is on. That I believe I am doing well."

Monday, January 23, 2012

விஜய்யை பாராட்டிய கமல் ஹாசன் (video)

Kamal watches 'Nanban' ............////


Now that Kamal Haasan is back from the United States after shooting some crucial scenes for his multilingual magnum opus 'Viswaroopam', a special show of 'Nanban' was organized for the Ulaganayagan at a preview theatre in Chennai.
"Vijay, who wanted to show the movie to Kamal, made arrangements for the special screening. Kamal was thoroughly impressed after watching Nanban and was all praise for Vijay, Shankar and others behind the movie," sources say.
They add: "Kamal said Nanban has been carefully made without missing out the essence of the original ('3 Idiots') and at the same time without losing on the nativity front. He hailed Vijay for his performance."
Meanwhile, the audio of 'Snehitudu', the Telugu dubbed version of 'Nanban', was launched in Hyderabad recently, at a colourful function attended by Vijay, Shankar, Sathyaraj and Ileana D' Cruz among others. The Telugu version is expected to hit the screens soon.

விஜயை அடிக்க தயங்கினேன்: ஸ்ரீகாந்த் ....


தற்போது திரைக்கு வந்து வசூலில் சாதனை படைத்து கொண்டிருக்கும் 'நண்பன்' படத்தில் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா இணைந்து நடித்துள்ளனர்.
படத்தின் இறுதிக்காட்சியில் விஜய்யை ஸ்ரீகாந்தும், ஜீவாவும் அடிப்பது போல் காட்சி உள்ளது. இதற்காக இருவர் மீதும் விஜய் ரசிகர்கள் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியானது.


இது குறித்து ஸ்ரீகாந்திடம் கேட்ட போது அவர் கூறுகையில் விஜய்யை நானும், ஜீவாவும் அடிப்பது கதைக்கு தேவைப்பட்டது. முதலில் அடிக்க தயங்கினேன். ரசிகர்கள் ஏற்பார்களா என்று சந்தேகம் கிளப்பியது.


விஜய் அந்த காட்சிக்கு வரவேற்பு இருக்கும் என்று சொல்லி எங்கள் தயக்கத்தை போக்கி நடிக்க வைத்தார். படம் வெளியான பிறகு விஜய் ரசிகர்களிடம் இருந்து எதிர்ப்பு வரவில்லை. ஆத்திரப்படவும் இல்லை. மாறாக போன் செய்து பாராட்டினார்கள்.
படப்பிடிப்பில் மூவரும் ஜாலியாக இருந்தோம்.


 விஜய் வேட்டைக்காரனாகவும் ஜீவா சேட்டைக்காரனாகவும் இருந்தனர். ஜீவாவுக்குள் வடிவேலுவும் சந்தானமும் இருக்கின்றனர். அந்த அளவு தமாஷ் பண்ணுவார்.


இரு நூறு பேர் மத்தியில் பேன்ட்டை கழற்றி நடிக்க நேர்ந்த போது கஷ்டமாக இருந்தது. மூன்று ஹீரோக்கள் படமாக இருந்தாலும் எல்லோருக்கும் சம வாய்ப்பு இருந்தது.


நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் சீன்களும் அமைந்தன. சிறந்த நடிப்பை வெளிப்படுத்த நல்ல இயக்குநர் அமைய வேண்டும். 'நண்பன்' படத்தில் ஷங்கர் கிடைத்தார். ஷங்கர் சிறந்த நடிகர். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நன்றாக செதுக்கினார். அவர் சொல்லி கொடுத்தபடி நடித்தேன் என்று கூறினார்.

100 கோடியை தாண்டும் நண்பன் ............


நண்பன் திரைப்படத்தி்ன் வசூல் 100 கோடியை தாண்டும் என்று தமிழ் திரையுலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், இலியானா, சத்யன் உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் நண்பன்.
ஹிந்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 3 இடியட்ஸ் திரைப்படத்தின் தமிழ் மொழியாக்கம் என்பதால் நண்பன் திரைப்படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது. அதனை பூர்த்தி செய்யும் வகையில் 12ம் திகதியே படத்தினை வெளியிட்டுள்ளார்கள்.


தமிழகத்தில் மட்டும் 625 திரையரங்குகளில் வெளியாகியுள்ள இத்திரைப்படம் முதல் வாரத்திலேயே சுமார் 40 கோடியை எட்டியுள்ளது.


படம் வெளியான முதல் நான்கு நாட்களுக்கு அனைத்து திரையரங்குகளிலும் கூட்டம் நிரம்பியதால் எதிர்ப்பார்த்தை விட நல்ல வசூல் கிடைத்துள்ளது.


எந்திரன் திரைப்படத்தினை அடுத்து அதிக திரையரங்குகள், மக்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்பு, கேரளா மற்றும் வெளிநாட்டு உரிமை, தெலுங்கு டப்பிங் உரிமை, இசை உரிமை, தொலைக்காட்சி உரிமை உட்பட அனைத்தையும் கணக்கிட்டால் நண்பன் திரைப்படம் 100 கோடியை தாண்டுவது உறுதி என்கிறது தமிழ் திரையுலக வட்டாரங்கள்.
இதுவரை எந்த ஒரு விஜய் திரைப்படத்திற்கும் கொடுக்காத விலையை கொடுத்து நண்பன் திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவி வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Saturday, January 21, 2012

நண்பன் பற்றி இளையதளபதி விஜய் பேட்டி ........


நான் நடிக்கும் திரைப்படங்களில் தேவையில்லாமல் அதிரடியான பஞ்ச் வசனங்களை திணிக்க மாட்டேன் என்று நண்பன் நாயகன் விஜய் பேட்டியளித்துள்ளார்.
கொலிவுட்டில் ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, சத்யராஜ் நடித்து திரையரங்குகளில் நண்பன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
நண்பன் திரைப்படத்தைப் பற்றி இளையதளபதி விஜய், நண்பன் ரசிகர்கள் விரும்பும் வகையில் அமைந்துள்ளது. எனது முந்தைய படங்களை விட வசூலில் சாதனை படைப்பதாக தகவல் வருகிறது.


பாலிவுட்டில் வெளியான 3 இடியட்ஸ் பார்த்த பிறகே நண்பனில் நடிக்க விரும்பினேன். 


நண்பனில் பஞ்ச் வசனங்களோ அதிரடி சண்டை காட்சிகளோ கிடையாது. என்னை திரையில் வித்தியாசமாக பார்க்க ஆசைப்பட்டேன்.


அது நண்பன் திரைப்படத்தின் மூலம் 
நிறைவேறி உள்ளது. என் படங்களில் தேவையில்லாத பஞ்ச் வசனங்களை திணிக்க விரும்ப மாட்டேன். நண்பன் மூலம் ஜீவா,ஸ்ரீகாந்த் ஆகியோர் நண்பர்களாகி விட்டனர்.


தற்கால கல்வி முறையின் தவறுகள் நண்பன் படத்தில் சுட்டிக் காட்டிப்பட்டு உள்ளது. மாணவர்களுக்கு எந்த துறையிலும் ஆர்வம் இருக்கிறதோ அதில் அனுப்ப வேண்டும்.


எனது அப்பா என்னை வைத்தியராக்க ஆசைப்பட்டார். எனக்கு நடிப்பில் ஆர்வம் இருந்ததால் சினிமாவுக்கு வந்து விட்டேன். எனது மகனுக்கு கிரிக்கட்டில் ஆர்வம் இருப்பதால் அவனை கிரிக்கட்டிற்கு அனுப்ப முயற்சி செய்வேன்.


தற்போது துப்பாக்கி படத்தில் நடிக்கிறேன். இப்படம் வேறு பரிமாணத்தில் இருக்கும். நண்பன் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்த முதல்வர் அவர்களுக்கு படக்குழுவினர் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Ajith's fan--Director saroj kumar...


This is the topic of discussion among thousands of Ajith fans in networking sites for 'Porkkalam's director Bandi Saroj Kumar posted a message about Ajith on his networking site.

This is what the director had to say: "If anyone criticizes actor Vijay... I just don't accept it. But if anybody dares to criticize Thala Ajith Kumar, I offend them, I oppose them, I can go to any extent... cause Ajith is a man... a man of honesty, a man with simplicity, a man with guts, a man with responsibility, a man who came up on his own belief and hard work, a star who made his own unique place in the hearts of Tamil audience... so please stop the nonsense... he stands as an idol for all aspiring actors... he's not a great actor, not a great dancer, almost had negligible mass hits... but still he stands in a place after Superstar... that is Ajith Kumar.

He further adds, "Unless you are in this film industry you can't analyze his greatness... I witnessed his glory being the closest spectator".

'Nanban' Telugu audio launch - A star-studded affair .......


The audio launch of 'Snehithudu', 'Nanban' in Telugu was a grand star-studded affair with the presence of several B-town celebs apart from Ilayathalapathy Vijay, Shankar, Harris Jayaraj and Ileana. The audio release was attended by Ram Charan, Dil Raju, Vidhu Vinod Chopra, Sharman Joshi, Rajkumar Hirani, SJ Suryah and others.

The first audio CD was released by Ram Charan who handed it over to Vidhu Vinod Chopra.  The event was marked by interesting anecdotes shared by Shankar and Cherry.
Shankar said that he had watched '3 Idiots' while shooting 'Enthiran' in Pune.  It did not take long for this top-class director to get immersed in the film and laugh and cry with the characters.  This made him take up his career's first remake movie.

Charan recalled how he danced to the feverish Chiku Buku Raile number from Shankar's Gentleman to prove to his dad (Chiranjeevi) that he could dance well.  He also seemed to regret that he declined the offer by the producer to reprise Aamir Khan's role in the South Indian remake.  "I was the first one to watch this movie even before its release.  The producers asked me to do the film in Telugu.  I felt that only someone of Aamir Khan's stature can do this.  I would not have said no had they told me that Shankar was going to direct the movie."

'Nanban' that is running to packed theatres in Tamil will soon see light of the day as 'Snehithudu' in Telugu.

Vijay's 'Nanban' success bash party at vijay home....


Not so long ago Vijay threw a small success bash for his biggie 'Velayudham' that raked in good moolah last Diwali. Now, the Ilayathalapathy threw a private success party for his 'Nanban' team at his villa in Chennai.

The party was to celebrate the success of 'Nanban' that is a clean family entertainer which is running to packed theatre houses. Although the other Pongal release, 'Vettai' is doing good business as well both the films aren't really competing at the BO as the genres are entirely different which is being a boost to both the movies in screens.
Present at the success bash were Vijay, director Shankar, Jiiva, Srikanth, Resul Pookutyy and the '
Nanban' team. A success party for the press is being organized this evening by the team.
The film stars Vijay, Jiiva, Srikanth, Ileana and Sathyaraj in the lead roles and has music by Harris Jayaraj. The film is a faithful remake of Bollywood blockbuster '3 Idiots' and throws light on the rigid education system in colleges.

'Nanban' team thanks CM ..........


The cast and crew of 'Nanban' have thanked Tamil Nadu Chief Minister J Jayalalithaa, for offering the government's support to meaningful movies. Newspaper advertisements of the film today carried a photograph of the CM, with lines expressing the team's gratitude to her.

The Shankar directed film, which has Vijay, Jiiva and Srikanth in the lead roles, has emerged the first movie to be granted entertainment tax waiver, after the AIADMK led by Jayalalithaa came to power in May last year.

Thanking the Chief Minister for the government's gesture, the advertisement read: "The Chief Minister has always been supporting meaningful movies. We specially thank her on behalf of everyone who had worked for Nanban."

As per the new rules from the TN government, a movie applying for tax exemption should have a 'U' certificate from the Regional Censor Board and should keep within Tamil culture and sensibility. Since a 22-member committee felt 'Nanban' followed all the rules, it recommended the movie fit to be exempted from tax (30%).

நண்பனை பல கோடிகள் கொடுத்து வாங்கிய விஜய் புதிய தகவல்!!!!!!!!


இப்போதெல்லாம் நல்ல படங்களை போட்டிப் போட்டு வாங்குவதில் விஜய் டிவியும் முன்னணியில் இருக்கிறது. பொங்கலுக்கு தொலைக்காட்சி முன்னால் தவம் கிடந்தவர்களுக்கு இது தெ‌ரிந்திருக்கும். நல்ல படங்கள் என்றால் அது விஜய்யில்தான் ஒளிபரப்பாகிறது.

இந்தப் போட்டியில் ஒரு மெகா வெற்றியை விஜய் பெற்றிருக்கிறது. அது விஜய் நடித்திருக்கும் நண்பன். கடும் போட்டிக்கிடையில் நண்பன் படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உ‌ரிமையை விஜய் டிவி வாங்கியுள்ளது.
இதற்காக பல கோடிகள் கொடுத்திருக்கிறது விஜய் டிவி.

விஜய்யை பாராட்டிய அவரது மகன்........


நண்பன் திரைப்படத்தின் வெற்றியையடுத்து நடிகர் விஜய்யை அவரது மகன் சஞ்சய் பாராட்டியுள்ளார்.
நண்பன் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டதை தொடர்ந்து மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்துள்ளது.
இப்படத்தை பார்த்து தன் மகன் பாராட்டிய விதத்தை விஜய் பெருமிதத்தோடு கூறியுள்ளார். இப்படம் வெளியான தினத்தன்று சில வேலை காரணமாக இயக்குனர் ஷங்கர் அழைத்ததால் நான் வீட்டிலிருந்து கிளம்பி சென்று விட்டேன்.


அன்றைய தினத்தன்று என் குடும்பமும் நண்பன் திரைப்படத்தை காண சென்றுள்ளனர்.
என் வேலைகளை முடித்து கொண்டு இரவு பதினோறு மணிக்கு நான் வீட்டுக்கு சென்றேன்.


என் காரை விட்டு இறங்குன உடனே வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்த என் மகன் சஞ்சய் நண்பன் இறுதி காட்சியில் சத்யன் செய்த மாதிரியே வேகமாக தன் ஆடைகளை கழற்றி யூ ஆர் கிரேட் டாடின்னு சொன்னான்.


ஒரு நிமிடம் திகைச்சிப்போய் நின்றேன், பின்னர் என் மகனையே இவ்வளவு பாதிச்ச இந்த திரைபபடம் வெற்றியடையும் என்று மிகவும் நம்புவதாக கூறியுள்ளார்.

Thursday, January 19, 2012

நண்பன்............


இந்தியாவின் கல்வி முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை சொல்லும் கல்லூரி மாணவர்களின் கதைதான் நண்பன்.
நண்பன் படம் சொல்ல வந்ததெல்லாம் உங்களுக்குப் பிடித்தமான துறையைத் தேர்ந்தெடுத்து படியுங்கள். அதில் நிச்சயமா ஜெயிப்பீர்கள் என்பதுதான். வாழ்க்கையின் மிகப்பெரிய தத்துவத்தை மூன்று மணிநேரத்தில் சொல்லிவிட்டுப் போகிறது நண்பன்.
ஏற்கனவே வெளிவந்த '3 இடியட்ஸ்' படத்தின் ரீமேக், விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கும் படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பாப்பு இருந்தது அதை அதிகமாகவே நிறைவேற்றியிருக்கிறது நண்பன்.
என்ஜினியரிங் படிக்கும் மாணவர்களான ஜீவா, ஸ்ரீகாந்த் உடன் கல்லூரியில் வந்து சேர்ந்து படிக்கிறார் விஜய். மூன்றுபேரும் நல்ல நண்பர்களாகி விடுகிறார்கள். கல்லூரியில் படித்து முடித்து ஜீவா, ஸ்ரீகாந்த் இருவரும் நன்றாக செட்டில் ஆகிவிடுகிறார்கள். ஆனால் நண்பன் விஜய் பற்றி எந்த தகவலும் இல்லை. சில வருடங்கள் கழித்து நண்பனை (விஜய்) தேடி அவனது ஊருக்குப் போகிறார்கள். அங்கு போய் பார்த்தால், அங்கு அவனுக்கு பதிலாக வேறு ஆள் (எஸ்.ஜெ.சூர்யா) இருக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது கதை.
படம் முடிந்து வெளியே வந்தாலும் நம் நினைவுக்கு வருவது நாம் பார்த்தது விஜய் படம்தானா என்ற எண்ணம்தான்? இதற்கு முன்பு விஜய் நடித்த படங்களில் எல்லாம் விஜய் அறிமுகமாகும்போதே தாரை தப்பட்டை முழங்கும். பூ மழை பொழியும். இப்படித்தான் இருக்கும் விஜய்யின் அறிமுகக்காட்சிகள். இந்த படத்தில் அப்படி எதுவும் இல்லை. பஞ்ச் வசனங்கள் இல்லை. படத்தில் நடித்த எல்லோருமே ஒரு கேரக்டராகத்தான் வந்து போகிறார்கள்.
பஞ்சவன் பாரிவேந்தனாக வரும் விஜய்யை பார்த்தவுடனே நமக்குப் பிடித்துப் போகிறது. கல்லூரியில் சொல்லித் தருவதெல்லாம் வாழ்க்கைக்குத் தேவையான அறிவு சார்ந்த விஷயம் அல்ல எல்லாம் வேலை பார்ப்பதற்கு தேவையான ஜஸ்ட் படிப்புதான் என்கிற ரீதியில் இருக்கிறது இவர் வந்து பேசுகிற காட்சிகள் எல்லாம். விஜய் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றிலும் இன்றைய இளைய சமுதாயத்திற்கு இருக்கிறது ஆயிரம் மெசேஜ்.
நண்பன் வந்துவிட்டான் என்ற செய்தி கேட்டு கிளம்பிய விமானத்தையே திருப்பி தரை இறங்கச் செய்து விடும் ஸ்ரீகாந்த் அலட்டலில் ஆரம்பிக்கிற படம் முழுக்க முழுக்க சிரிப்பு மழைதான். சிரிப்பு மட்டுமல்ல சிந்திக்கவும் வேண்டிய மெசேஜ்கள் வந்து போகின்றன ஃப்ரேம் பை ஃப்ரேம். தனக்குப் பிடிக்காவிட்டாலும் அப்பாவுக்காக என்ஜீனியரிங் படித்துவிட்டு பின்பு தன் அப்பாவிடம் தனக்குப் பிடித்த போட்டோகிராபியை படிக்க ஆசைப்படுகிறேன் என்று சொல்லும் காட்சிகள் செம டச்சிங்.
விஜய்க்கு அடுத்து பிரமாதப்படுத்தியிருப்பவர் சத்யன். குறிப்பாக அந்த கல்லூரி விழா மேடைப் பேச்சு. சான்ஸே இல்லை. ஸ்ரீகாந்த், ஜீவா இருவரும் உணர்ந்து நடித்திருக்கிறார்கள். குறிப்பாக ஸ்ரீகாந்துக்கு அதிக வாய்ப்பு. நன்றாகவே பயன்படுத்திக் கொண்டுள்ளார். ஜீவாவின் ஏழ்மையைக் குறிக்க படம் முழுக்க ஒரு ஜிப்பாவை மாட்டிவிட்டிருப்பது நன்றாக இல்லை.
சத்யராஜுக்கு மிக முக்கிய வேடம். சரியாகத்தான் செய்திருக்கிறார். ஆனாலும் ஏதோ ஒன்று குறைவது போன்ற உணர்வு. ஒரு காட்சி என்றாலும் கதைக்கு முக்கிய திருப்பம் தருகிறது எஸ்.ஜே. சூர்யாவின் பாத்திரம். அவரும் கச்சிதமாகச் செய்திருக்கிறார்.
படத்தில் காமெடி ரொம்ப ரொம்ப அதிகம். அதுவும் குலுங்கி குலுங்கி சிரிக்கிற அளவுக்கு இருக்கின்றன காமெடிகள். ஜீவாவின் அம்மா சப்பாத்தி போடும் போது செய்கிற மேனரிஸம் இருக்கிறதே தியேட்டரே செம அலப்பறையாகிறது அந்த காட்சிக்கு. இதற்காகவே ரீப்பிட்டடு ஆடியன்ஸ் நிச்சயம்.
சில காட்சிகளில் குறைகளும் இருக்கின்றன. ஆனால் அது ஒரிஜினலிலும் உண்டு. அந்த வகையில் காட்சிக்குக் காட்சி, வசனத்துக்கு வசனம் அப்படியே மொழியாக்கம் செய்த ஷங்கரை குறைசொல்ல முடியாதுதான். ஆனால் அவர் நினைத்திருந்தால், அந்தக் காட்சிகளில் இன்னும் நம்பகத்தன்மை கொண்டுவந்திருக்க முடியும்.
குறிப்பாக, அந்த பிரசவ காட்சி. என்னதான் வீடியோ கான்பரன்சிங், சக மாணவர்களின் துணை, அபார பொறியியல் திறன் கொண்டு அந்த காட்சியை சமாளித்திருந்தாலும், நடைமுறை சாத்தியம் என்ற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை. இந்தக் காட்சிக்கு முன்பு இலியானா - விஜய் டூயட்டால் லேசாக டல்லடிக்கும் படத்தின் இரண்டாம் பாதி, இந்த பிரசவக் காட்சியின் நீளத்தால் தொங்கிப் போகிறது.
மில்லி மீட்டர் சத்யராஜை கெட் அவுட் சார் என்று சொல்லிவிட்டு தள்ளிக்கொண்டு போகும் இடம் டச்சிங். விஜய் அல்லாத ரசிகர்களும் ரசிக்கும்படியாக ஒரு படத்தை நீண்ட நாளைக்கு அப்புறம் பார்த்த திருப்தி. இதற்காக ஷங்கரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் கேமிராவை பற்றி சொல்லவேண்டுமென்றால் கலர் ஃபுல், கலக்கல் என்று இரண்டு வார்த்தையில் சொல்லிவிடலாம். ஹாரிஸின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்திருக்கிறது. ரீரிக்கார்டிங்கிலும் தூள் கிளப்பியிருக்கிறார். படத்திலிருக்கும் துள்ளல் ரீரிக்கார்டிங்கிலும் இருக்கிறது. ஆண்டனியின் கத்திரியில் இருக்கிறது நாசூக்கு.
ஷங்கர் மற்றும் மதன் கார்க்கியின் வசனங்கள் கூர்மை ஆனால் முக்கியமான வசனங்கள் வரும் காட்சியில் சற்றே அழுத்தம் குறைவாக இருப்பது மிக குறைந்த அளவில் தெரிகிறது. லொகேஷன்கள் மிக அருமை.
சொந்த கதையை படமாக எடுப்பது என்றால் எப்படி வேண்டுமானாலும் எடுத்துத் தள்ளிவிடலாம். ஆனால் அதுவே இன்னொருவரது கதை என்றால், அதுவும் ஏற்கனவே வெளிவந்த படத்தை படமாக எடுப்பது என்றால் கரணம் தப்பினால் மரணம் என்கிற ரீதியில்தான் எடுக்கவேண்டி இருக்கும். அதையெல்லாம் கவனமாக பார்த்து பார்த்து செய்திருக்கிறார் ஷங்கர். நல்ல வேளை இந்த படம் ஷங்கர் இயக்கத்தில் இருந்து வெளிவந்தது.
அனைத்து தரப்பினரையும் முட்டாளாக்கி 3 மணி நேரம் ஜாலியாக இருக்க வைத்த ஷங்கரை கை குலுக்கு பாராட்டுவோம்.
நடிகர்கள்: விஜய், இலியானா, ஸ்ரீகாந்த், ஜீவா, சத்யன், சத்யராஜ், எஸ்.ஜே. சூர்யா, அனுயா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்குநர்: ஷங்கர்
தயாரிப்பு: ஜெமினி பிலிம்ஸ்

விஜய் வேடத்தை மாற்றிய இயக்குனர் முருகதாஸ் !!!!!


இளையதளபதி விஜய் நடிக்கும் துப்பாக்கி திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்துள்ளது.
கொலிவுட்டில் இளையதளபதி விஜய், முருகதாஸ், ஹாரீஸ் ஜெயராஜ் கூட்டணியில் துப்பாக்கி படம் வேகமாக உருவாகி வருகிறது.


துப்பாக்கியில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கலைப்புலி எஸ்.தாணு துப்பாக்கியை தயாரிக்கிறார்.


இந்தப்படத்துக்காக நாயகன் விஜய்யின் வேடத்தை இயக்குனர் முருகதாஸ் மாற்றியுள்ளார்.


இந்தப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பை வானகரம் சந்தையில் சண்டைக்காட்சியை படமாக்கியுள்ளார்கள்.


இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் பரபரப்பாக நடந்து வருகிறது. தன்னுடைய படத்திற்கு நீண்ட நாட்கள் ஆகக்கூடாது என்பதற்காக, பணிகளை வேகமாக விஜய் முடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

துப்பாக்கி திரைப்படத்தில் அகோன் .......


ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் துப்பாக்கி திரைப்படத்தில் பிரபல பாடகரான அகோன் பாடிவுள்ளார்.
ஸ்மாக் தட் என்ற ஒரே ஆல்பத்தின் மூலம் இசை உலகில் புகழின் உச்சத்திற்கு சென்றவர் பிரபல பாடகரான அகோன்.


முதன் முதலாக இந்தி திரைப்படமான ரா.ஒன் திரைப்படத்தில் சம்மக் சலோ.. என்ற பாடலை பாடினார். அப்பாடல் இந்தி திரையுலகில் பெரும் வரவேற்பை பெற்றது.


தற்போது ஏகான் துப்பாக்கி திரைப்படத்திற்காக ஒரு பாடலை பாட இருக்கிறார். இப்பாடலின் பதிவு விரைவில் சென்னையில் நடைபெறவுள்ளது.


சம்மக் சலோ பாடலைவிட அதிகமாக, துப்பாக்கி பாடல் வரவேற்பை பெற வேண்டும் என்று ஏகானிடம் கூறியுள்ளார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.

ஒரு மில்லியன் டொலர்களுக்கு விலைபோன பில்லா-2 ....


பில்லா-2 திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமையை ஜி.கே. மீடியா என்ற நிறுவனம் ஒரு மில்லியன் டொலர்களை கொடுத்து வாங்கியுள்ளது.
அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் பில்லா 2 திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இப்படத்தின் வெளிநாட்டு உரிமையை அமெரிக்காவில் செயற்படுகிற தமிழ் திரைப்பட விநியோக நிறுவனமான ஜி.கே.மீடியா ஒரு மில்லியன் டொலர்கள் கொடுத்து வாங்கியுள்ளது.


ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் ஆகியோரது திரைப்படங்கள் வெளிநாடுகளில் விற்பனையாகும் அளவிற்கு, தற்போது அஜித்தின் பில்லா-2 திரைப்படம் விற்பனையாகியுள்ளது.


இந்த ஆண்டு வெளியாகவுள்ள திரைப்படங்களில் பில்லா-2 திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை தரும் என்று கொலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும் துப்பாக்கி: விஜய் !!!



ரசிகர்களுக்கு துப்பாக்கி திரைப்படம் பெரிய விருந்தாக அமையும் என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.
ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், கௌதம் மேனன் என்று முன்னணி இயக்குனர்கள் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வருகிறார்.



நண்பன் திரைப்படத்தை முடித்த கையோடு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி படத்தில் அவர் நடித்து வருகிறார்.
துப்பாக்கி படத்தில் நடித்த அனுபவம் குறித்து விஜய் கூறியதாவது, துப்பாக்கி படம் என்னை இன்னொரு விஜய்யாக ரசிகர்களுக்கு காட்டும்.


இந்தப்படம் நிச்சயம் ரசிகர்களுக்கு ஒரு பெரிய விருந்தாக அமையும், துப்பாக்கி தான் படத்தின் கதை என்றால் துப்பாக்கியில் இருக்கும் தோட்டா நான்.
துப்பாக்கியில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.


மேலும் நண்பன் படம் குறித்து அவர் கூறுகையில், நண்பன் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே நண்பன் படம் பெரிய வெற்றியடையும் என்று எனக்குத் தெரியும்.


சங்கர் இயக்கிய முதல்வன் திரைப்படத்திலேயே நான் நடிக்க வேண்டியது. ஆனால் சில காரணங்களால் அது முடியாமல் போய்விட்டது.


சங்கர் படத்தில் நடிக்க வேண்டும் என்ற என்னுடைய ஆசை இப்போது நண்பன் திரைப்படம் மூலம் நிறைவேறியுள்ளது என்று கூறியுள்ளார்.

அஜீத்துடன் இணைய ஆர்யா யோசனை ...//


தமிழ் திரையுலகில் அஜீத்-விஷ்ணுவர்தன் இணையும் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
அஜித் குமாரின் அடுத்த படத்தை விஷ்ணுவர்தன் இயக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இத்திரைப்படத்தில் அஜீத்குமாருடன் இணைந்து ஒரு முக்கிய வேடத்திற்கு விஷ்ணு வர்தனின் தம்பி கிருஷ்ணா நடிப்பார் என்று தகவல் பரவியது. 
ஆனால் கிருஷ்ணா அத்தகவலை மறுத்தார்.


இதற்கிடையே விஷ்ணுவர்தனின் அறிந்தும் அறியாமலும், பட்டியல், சர்வம் ஆகிய படங்களில் ஆர்யா நடித்துள்ளார். விஷ்ணு வர்தனும் ஆர்யாவும் நெருங்கிய நண்பர்கள்.


அஜீத்துடன் இணையும் படத்தில் இருக்கும் மற்றொரு முக்கிய வேடத்திற்கு ஆர்யாவை ஒப்பந்தம் செய்ய விஷ்ணுவர்தன் நினைத்துள்ளார்.
ஆர்யா விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்க பெரும் ஆர்வத்தோடு இருந்தாலும், தற்போது செல்வராகவன் இயக்கும் இரண்டாம் உலகம் படத்திற்கு தனது திகதிகளை ஒதுக்கி கொடுத்து விட்டதால் என்ன செய்வது என்று யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பில்லா-2 திரைப்படத்திற்கான விற்பனை அமோகம் .....


திரையுலகில் மங்காத்தா திரைப்படத்தை விட பில்லா-2 திரைப்படத்தின் விற்பனை 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
தல அஜீத் குமார் நடிப்பில் வெளிவர இருக்கும் பில்லா 2 படத்திற்கான LOGO மட்டுமே முதலில் வெளியானது.
பில்லா-2 படத்தில் அஜீத்குமாரின் படங்கள் எதுவுமே வெளியாகவில்லை. பின்பு பொங்கல் தினத்தன்று அஜீத்தின் புகைப்படத்தோடு விளம்பரம் வெளியானது.
அவ்விளம்பரத்திற்கு அஜீத் ரசிகர்களிடையே வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக EVERY MAN HAS A PAST.. EVERY DON HAS A HISTORY என்ற வார்த்தைகள் ரசிகர்களிடையே படத்திற்கான எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.
பில்லா படத்திற்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜா தான் பில்லா 2 படத்திற்கும் இசையமைக்கிறார். படத்தில் வரும் முதல் பாடல் மட்டும் இன்னும் தயாராக வில்லை என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.
ஆனால் மற்ற பாடல்கள் அனைத்தையும் யுவன் ஷங்கர் ராஜா முடித்து கொடுத்து விட்டார். பில்லா படத்தில் இடம் பெற்ற TITLE TRACK போலவே பில்லா 2 படத்தில் இடம் பெற இருக்கும் பாடலும் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று யுவன் அதிகம் யோசித்து வருகிறார்.
மேலும் இப்பாடலுக்கு யார் நடனம் அமைப்பது என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. மேலும் பில்லா-2 மங்காத்தா படத்தினை விட சுமார் 30% அதிகமாக விற்று இருக்கிறார்கள்.
இதுவரை இல்லாத அளவிற்கு அஜீத்தின் பில்லா 2 விற்பனையாகி இருப்பது படக்குழுவினரை மேலும் உற்சாகப்படுத்தி இருக்கிறது.

Saturday, January 14, 2012

நண்பன் படத்துக்கு முழு வரிவிலக்கு – ஜெ ஆட்சியில் வரிவிலக்கு பெற்ற முதல்படம்!....


நண்பன் படத்துக்கு முழு வரிவிலக்கு அளித்துள்ளது அரசு. ஜெயலலிதா ஆட்சியில் வரிவிலக்கு பெற்றுள்ள முதல் படம் நண்பன் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் தலைப்பு வைத்தாலே போதும், வரி விலக்கு உண்டு என்று முன்பு கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் தரமற்ற குப்பைப் படங்களும் தமிழில் தலைப்பு வைத்ததற்காக வரி விலக்கு பெற்றன.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும், தமிழில் பெயர் வைத்தால் மட்டும் போதாது… அனைவரும் பார்க்கத்தக்க யு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், தரமான படமாக இருக்க வேண்டும். அப்போதுதான் வரிவிலக்கு என நிபந்தனைகள் விதித்தது.
வரிவிலக்கு பெறத் தகுதியான படங்களை தேர்வு செய்ய 22 பேர் கொண்ட குழுவையும் அமைத்தது அரசு. இதில் இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இசையமைப்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழு பார்த்து பரிந்துரைக்கும் படத்துக்கே வரிவிலக்கு கிடைக்கும். வரிவிலக்குக்கு படங்களை அனுப்ப ரூ 10000 கட்டணம் உண்டு.
இந்த நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் விஜய் நடித்துள்ள நண்பன் படம் இருப்பதால் படத்துக்கு முழு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஷங்கர் இயக்கத்தில், விஜய்யுடன் ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் நடிக்க பொங்கலுக்கு வெளியாகியுள்ள இந்தப் படத்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் வரிவிலக்கு அறிவித்துள்ளது வசூலை மேலும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா பதவிக்கு வந்த இந்த 7 மாதங்களில் வரி விலக்கு பெற்றுள்ள முதல் படம் நண்பன் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தல அஜித்தும் கமலும் இணைந்து நடிக்கும் படம் பரபரப்பு தகவல்கள்!!!!!



கூட்டல் கழித்தல் மாதிரிதான் கோடம்பாக்கத்தில் நடைபெறும் முட்டல் மோதல்களும்! தசாவதாரம் படம் வெளியான நேரத்தில் உச்சக்கட்ட ‘மிர்ச்சி’யாக இருந்தார்கள் அப்படத்தின் ஹீரோவான கமலும், தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரனும். படத்தின் ரிலீஸ் தேதியை கூட பேப்பர் விளம்பரத்தை பார்த்தே அறிந்து கொள்ள முடிந்தது கமலால். அப்படியெல்லாம் தள்ளி நின்ற இருவரும் இப்போது மீண்டும் கை கோர்த்திருக்கிறார்கள்.

இந்த கூட்டணி கூண்டுக்குள் அடைக்கலமாகியிருப்பது கமல் மட்டுமல்ல, ஒரு காலத்தில் ஆஸ்கர் பிலிம்சில் அடுத்தடுத்த படங்களில் நடித்த அஜீத்தும்தான். அந்த நேரத்தில் அஜீத்துக்கும் ஆஸ்கருக்கும் கூட மயிரிழை அளவுக்கு மனக்கசப்பு இருந்தது.

ஒரு சின்ன புன்னகை எல்லாவற்றையும் வென்று விடுமல்லவா? இப்போது மீண்டும் அந்த அதிசயம் நிகழப்போவதாக கிசுகிசுக்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

கமல் நடிக்கவிருக்கும் இந்த புதிய படத்தில் ஒரு முக்கியமான ரோலில் அஜீத்தையும் நடிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறாராம் ஆஸ்கர் ரவிச்சந்திரன். இவரும் ஆகட்டும் பார்க்கலாம்… என்று கூறியிருக்கிறாராம்.
ஒரு படம். இரு அழகர்கள்…

புயல் பாதித்த மக்களுக்கு மேலும் உதவிகள் - விஜய் அறிவிப்பு!!!!!!

புதுவையில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. நடிகர் விஜய் இதில் கலந்து கொண்டு உதவிகளை வழங்க சம்மதித்து இருந்தார். அதன்படி நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி புதுவை சுப்பையா சாலையில் உள்ள குபேர் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
 
இதில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய் பகல் 11.45 மணியளவில் நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு வந்தார். அப்போது பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். விஜய்யை பார்த்ததும் அவர்கள் ஆரவாரமாக கோஷமிட்டனர். அவர்களை பார்த்து கையசைத்து மகிழ்ச்சி தெரிவித்த விஜய்  விழா மேடைக்கு வந்தார்.
 
பின்னர் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. அகில இந்திய விஜய் ரசிகர் மன்ற தலைவரும், புதுவை முன்னாள் எம்.எல்.ஏ.வுமான புஸ்சிஆனந்து  நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
 
நடிகர் விஜய் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச அரிசி, ஆடைகள்,  போர்வை, பாய், பாத்திரங்கள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
 
இந்த நிகழ்ச்சியை முன்கூட்டியே நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதாக இருந்தது. ஆனால் சூட்டிங் காரணமாக என்னால் முன்கூட்டி வரமுடியவில்லை. நாங்கள் இப்போது அளித்துள்ள உதவி சிறிய அளவிலானது தான். இன்னும் இதுபோன்ற உதவிகளை செய்வோம்.  அனைவருக்கும் என் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
முன்னதாக விஜய் புதுவையில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை சுற்றிப்பார்த்து அங்குள்ள மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

என்னுடைய திரைப்படத்தில் வித்தியாசமான அஜீத்தை ரசிகர்கள் பார்ப்பார்கள்: விஷ்ணுவர்தன்.....


தமிழ் திரையுலகில் தல அஜீத்குமாருக்காக திரைக்கதையை வேகமாக தயாரித்து வருவதாக இயக்குனர் விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார்.
தல அஜீத் குமார் நடித்த பில்லா-2 திரைப்படத்தை ஷக்ரி டோலெட்டி இயக்க பார்வதி ஓமன குட்டன் நாயகியாக நடித்துள்ளார்.
பில்லா-2 திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 


இத்திரைப்படத்திற்கான தனது பணிகள் முடிந்ததும் அஜீத் குமார் குடும்பத்துடன் சிங்கப்பூர் சென்று வந்துள்ளார்.


இதையடுத்து அஜீத் குமார் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இதுகுறித்து விஷ்ணுவர்தன், அஜீத் குமாரிடம் சொன்ன ஒரு வரி கதைக்கு திரைக்கதை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
திரைக்கதை அமைக்கும் பணிகள் எல்லாம் முடிந்தால் தான் அந்தந்த பாத்திரத்திற்கு யார் பொருந்துவார்கள் என்று தீர்மானிக்கப்படும். அதன் பிறகே அடுத்த கட்ட பணிகள் தொடங்கும்.


அதற்குள் பல்வேறு விதமாக தகவல்கள் வெளி வருகின்றன. ஆனால் எதுவும் உண்மையில்லை. திரைக்கதை அமைக்கும் பணி இறுதிகட்டத்தில் இருக்கிறது. அது முடிந்தால் தான் மற்றவைகளில் கவனம் செலுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.
அஜீத் ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு, நீங்கள் எனது படத்தில் வித்தியாசமான தலயை பார்க்க இருக்கிறீர்கள் என்பது மட்டும் உறுதி என்று தெரிவித்துள்ளார்.

Friday, January 13, 2012

Billa 2 first look out tomorrow............


Ajith fans have been starved for news about Billa 2 as the makers have been keeping everything under close wraps. Now producer, Sunir Khetrapal has announced that he has a special treat for fans this Pongal. The first look for the film will be revealed tomorrow and the logo and posters will be unveiled.

Billa 2 features Ajith Kumar, Parvathy Omanakuttan, former Miss India, Bruna Abdullah, Vidyut Jamwal and Sudhanshu Pandey. Yuvan Shankar is doing the music, Nirav Shah will handle cinematography, and Sreekar Prasad is the editor. It is expected that Billa 2 will be a big summer release.

விஜய்யின் உழைப்பை பார்த்து வியந்து போனேன் : நெகிழ்கிறார் ஸ்ரீகாந்த்…!


பைக்ரேஸ் பிரியரான ஸ்ரீகாந்தை, “ரோஜாக்கூட்டம்” படம் மூலம் ஹீரோவாக்கி அழகு பார்த்தவர் ஆஸ்கர் ரவிச்சந்திரன். தொடர்ந்து பல வெற்றி படங்களை தந்த ஸ்ரீகாந்த், இடையில் சிறு சிறு சறுக்கல்களை கடந்து இப்போது டைரக்டர் ஷங்கரின் நண்பனில் விஜய், ஜீவாவோடு நடித்து ரொம்ப பரபரப்பாக காணப்படுகிறார். நண்பன் படத்தில் விஜய்யுடன் நடித்த அனுபவத்தை பற்றி ஸ்ரீகாந்த் சொல்லும் போது ரொம்பவே வியப்படைகிறார்.
அவர் கூறுகையில், எந்த பந்தாவும் இல்லாம ரொம்ப எளிமையானவர் தான் விஜய்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது. படத்தில் அவரோட டெடிகேஷன், அந்த கடின உழைப்பு என்னை பிரமிக்க வச்சிருக்கு. நெருடல் இல்லாத நடிப்பு, சின்சியாரிட்டி தான் விஜய்யை இந்த அளவிற்கு கொண்டு போயிருக்குன்னு நினைக்கிறேன். நண்பன் படத்தில் அவருடன் நடித்தது நல்ல அனுபவத்தை தந்தது. “என் ப்ரெண்ட போல யாரு மச்சான்…” என்ற பாட்டை கிட்டத்தட்ட 25 வருஷ பழைய வாட்டர் டேங்கில் வைத்து சூட் பண்ணினோம். அங்கு சூட்டிங் நடந்த அனுபவத்தை இப்ப நினைச்சாலும் பயமா இருக்கு. படத்தோடு முதல் சாங்கும் அதுதான். கிட்டத்தட்ட 14நாட்கள் சூட்டிங் நடந்தது. சூட்டிங் ஆரம்பிக்கும் வரை ரொம்ப அமைதியா இருப்பார் விஜய், ஆனால் சூட்டிங் ஆரம்பிச்சுட்டா அந்தகாட்சியில் பின்னி எடுத்திடுவார். ரொம்ப ஹோம்வொர்க் பண்ணக்கூடியவர். அதனால் விஜய்யை பார்க்கும் போதெல்லாம் ரொம்ப வியந்து பார்ப்பேன் என்கிறார்.

Thursday, January 12, 2012

நண்பன் திரைப்படத்தை பாராட்டிய 3 இடியட்ஸ் கதாநாயகன்.....

3 இடியட்ஸ் திரைப்படத்தின் மூன்று கதாநாயகர்களி்ல் ஒருவராக நடித்த ஷர்மான் ஜோஷி, நண்பன் திரைப்படத்தை பாராட்டியுள்ளார்.
ஹிந்தியில் வெளியான 3 இடியட்ஸ் திரைப்படத்தில் மூன்று கதாநாயகர்களி்ல் ஒருவராக நடித்தவர் ஷர்மான் ஜோஷி.


அவர் சமீபத்தில் நண்பன் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்து ரசித்திருக்கிறார்.
இத்திரைப்படத்தை பற்றி அவர் கூறுகையில், இப்படத்தின் திரைக்கதையை இயக்குனர் சங்கர் மிகவும் பிரம்மாண்டமாக எடுத்துள்ளார்.
மேலும் இப்படத்தில் நடித்துள்ள விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் உட்பட அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
இத்திரைப்படம் ஹிந்தியி்ல் வெளியான 3 இடியட்ஸ் திரைப்படத்தின் மறு ஒளிபரப்பாக இருந்தாலும், சேட்டன் பகட் எழுதிய 5 பாயிண்ட் சம்ஒன்(5 point someone) சிறு கதையின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது என்று கூறினார்.

என் வாழ்க்கையில் நண்பன் முக்கியமான திரைப்படம்: சத்யராஜ்...


என்னுடைய திரையுலக வாழ்க்கையில் நண்பன் திரைப்படத்திற்கு முக்கியமான இடமுள்ளது என்று நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.
கொலிவுட்டில் ஷங்கர் இயக்கியுள்ள நண்பன் திரைப்படத்தில் சத்யராஜ் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.
ஷங்கரின் இயக்கத்தில் விஜய்யுடன் நடித்த தன்னுடைய அனுபவத்தை சத்யராஜ் கூறியுள்ளார்.


தொடக்கத்திலேயே நண்பன் திரைப்படத்தில் வழக்கமான சத்யராஜின் தோற்றம் தெரியக்கூடாது. அதே சமயம் இந்தி 'த்ரீ இடியட்சில்' நடித்துள்ள பொம்மன் இரானியின் பாணியும் வந்து விடாமல் கதாப்பாத்திரத்தை வித்தியாசப்படுத்த இயக்குனர் ஷங்கர் கடுமையாக உழைத்துள்ளார்.


இதுவரையில் இருநூறு படங்களுக்கு மேல் நடித்து விட்ட எனக்கு இனி மேல் என்ன புதுசா செய்ய முடியும் என்ற யோசனை தட்டியது. ஆனால் ஷங்கர் என்னை புதிதாக மாற்றியுள்ளார்.
என்னுடைய சினிமா வாழ்க்கையில் நண்பனுக்கு முக்கியமான இடமுள்ளது என்று சத்யராஜ் புகழ்ந்துள்ளார். இயல்பாக நடிக்கிற எல்லோரையும் எனக்கு பிடிக்கும்.


இளையதளபதி விஜய்யும் அந்த வரிசையில் இடம் பிடித்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் முதல் நபராக எனக்கு முன்னாடி தயாராக நிற்பார்.
பாதி இட்லி சாப்பிடும் போதே படப்பிடிப்பு தயார் என்று அறிவித்தால் உடனே தயாராகி விடுவார் என்று சத்யராஜ், விஜய்யை பாராட்டியுள்ளார்.

Wednesday, January 11, 2012

அஜீத்துடன் இணைகிறார் அமலாபால்........


விஷ்ணுவர்தன் இயக்கும் திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடி அமலாபால் நடிக்கவுள்ளார்.
மைனா, தெய்வத்திருமகள் திரைப்படங்கள் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை அமலா பால்.


இத்திரைப்படங்களின் வெற்றியால் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என அனைவரும் அமலா பாலின் திகதிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.


இதனால் மற்ற நடிகைகள் மத்தியில் அமலா பால் மீது சிறு பொறாமை உள்ளது. நடிகர் அஜித் தற்போது பில்லா-2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.


அடுத்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார், இதில் அஜீத்துக்கு ஜோடி அமலாபால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இன்னும் ஓரிரு மாதங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tuesday, January 10, 2012

Nanban’s running time..........


Nanban’s running time is 3 hours and 10 minutes, say sources. This means, Shankar has included a lot more scenes than it was in the original version 3 Idiots which had a running time of 164 minutes. Director Shankar has done a thorough research on the bookFive Point Someone, penned by Chetan Bhagat. 3 Idiots is inspired from this book and so is Nanban.
The film stars Vijay, Jiiva, Srikanth, Ileana and others. It will hit the screens on January 12th as a Pongal treat for all movie buffs.

ரசிகர் மன்றங்களைக் கலைத்தது எதனால்? – அஜீத் புதிய பரபரப்பு பேட்டி!!!!!!

சென்னை: சினிமாவை தவிர்த்து ரசிகர்களுக்கு வேறொரு வாழ்க்கை இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் அரசியல் கருத்துக்களை வெளியிட உரிமை இருக்கிறது. என் ரசிகர்களை பொறுத்தவரை அவர்கள் என் படங்களை பார்த்து ரசிக்க வேண்டும். சுதந்திரமான சிந்தனை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காகவே மன்றங்களைக் கலைத்தேன், என்கிறார் அஜீத்.

நடிகர் அஜீத்குமார் தனது ரசிகர் மன்றங்களை கடந்த மே மாதம் கலைத்துவிட்டார். அஜீத் அரசியலுக்கு வருவார் என எதிர்ப்பார்த்துக் காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு மன்றத்தை அஜீத் கலைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனாலும் மங்காத்தா படத்துக்கு பேனர்கள், கொடி தோரணங்கள் கட்டி கொண்டாடினார்கள். மன்றத்தைக் கலைத்ததால் படம் ஓடாது என்று சிலர் கூறி வந்த நிலையில், அதைப் பொய்யாக்கி மங்காத்தா ஹிட் படமாகியுள்ளது.

இந்த நிலையில் ரசிகர் மன்றத்தை கலைத்தது ஏன் என்பது பற்றி அஜீத் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், “சினிமாவுக்கும் அரசியலுக்கும் உள்ள பந்தம் இறுகி வருகிறது. ரசிகர்கள் வெவ்வேறு வாழ்க்கை முறைகளில் இருந்து வருகிறார்கள். அவர்கள் நலன் எனக்கு முக்கியமாக படுகிறது. சினிமாவை தவிர்த்து அவர்களுக்கு வேறொரு வாழ்க்கை இருக்கிறது. சினிமா என்பது பொழுதுபோக்கு சார்ந்தது. அதை தனிப்பட்டவர்கள் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளக்கூடாது.

ஒவ்வொருவருக்கும் அரசியல் கருத்துக்களை வெளியிட உரிமை இருக்கிறது. என் ரசிகர்களை பொறுத்தவரை அவர்கள் என் படங்களை பார்த்து ரசிக்க வேண்டும். இவைகளையெல்லாம் கருத்தில் கொண்டுதான் ரசிகர்மன்றத்தை கலைத்தேன்.

எனது முடிவை பலரும் பாராட்டினார்கள். அரசியல் முடிவுகளை தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு அமைப்பில் இருந்துதான் செய்ய வேண்டும் என்பது அல்ல.

சமூகத்தில் இரண்டு பிரிவு மக்கள் உள்ளனர். ஒரு பிரிவினர் நேரடியாக களம் இறங்குவார்கள். இன்னொரு பிரிவினர் தனி மனிதனாக இருந்து கொண்டு என்ன செய்யலாம் என்று கேட்பவர்கள். நான் இதில் இரண்டாவது வகை.

எனக்கு அரசியல் ஆர்வம் கிடையாது. என் சக்திக்கேற்ப மக்களுக்கு முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். ஒவ்வொருவரும் இதுபோல் செயல்பட்டால் உலகம் சிறப்பாக மாறும்.

மங்காத்தா படத்தில் நரைத்த தாடியுடன் வந்தேன். பில்லா-2 படத்தில் இளமையாக வருகிறேன்.

இப்படத்துக்கு பின் என் வயதுக்கேற்ற வேடங்களைத் தேர்வு செய்து நடிப்பேன்,” என்றார் அஜீத்.

இளைய தளபதி விஜய்க்காக உருவாகும் தளபதி ANTHEM....!!!!


தமிழ் திரையுலகில் இளைய தளபதி விஜயக்காக அவரது ரசிகர்கள் THALAPATHY ANTHEM என்ற பெயரில் ஒரு பாடல் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள்.
தமிழ் திரையுலகில் முன்னணி நாயகர்கள் தற்போது தங்களுடைய பாடல்கள் மூலம் பிரபலமடைந்து வருகின்றார்கள்.
நாயகன் தனுஷ் WHY THIS KOLAVERI பாடல் மூலம் பிரபலமாகி விட்டார். சிம்பு A LOVE ANTHEM FOR WORLD PEACE என 96 மொழிகளில் காதல் என்ற வார்த்தைகளை கோர்த்து ஒரு பாடலாக தொகுத்து வெளியிட இருக்கிறார்.
இதையடுத்து விஜய் ரசிகர்கள், விஜய்க்காக THALAPATHY ANTHEM என்ற பெயரில் ஒரு பாடல் ஒன்றை உருவாக்கி வருகிறார்கள்.
எங்கேயும் எப்போதும் படத்தில் வரும் பேருந்து காட்சிகளில் கல்லூரி மாணவனாக நடித்த வாட்சன் என்பவர் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
டிவிட்டர் இணையத்தில் இது குறித்து விஜய் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். இப்பாடலை தனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கி வரும் வாட்சன், வருகிற 20ம் திகதிக்குள் இப்பாடலை தயார் செய்து வெளியிட தீர்மானித்து இருக்கிறார்.