ஷங்கர் இயக்கத்தில் நண்பன் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நாயகி இலியானா நடித்துள்ளார்.
நண்பன் திரைப்படத்தை பற்றி நாயகி இலியானா, நண்பன் படம் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது. நிறைய பாராட்டுகளும் குவிகிறது.
பாலிவுட்டில் வெளியான 3 இடியட்ஸ் படத்தின் தமிழாக்கமே நண்பன் என்றாலும் படத்தில் நடிப்பதற்காக 3 இடியட்ஸ் படத்தை பல தடவை பார்த்தேன். ஆனால் அதில் நடித்த கரீனா கபூர் நடிப்பை காப்பி அடித்து நடிக்க வில்லை.
கரினா கபூர் பாணி வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். என் நண்பர்கள் கரீனா கபூருடன் ஒப்பிட்டு பேசவில்லை. என் பாணியில் நடித்திருப்பதாக என்னை பாராட்டினார்கள்.
கொலிவுட்டில் கேடி படத்துக்கு பின் 5 ஆண்டுகளுக்கு பின்பு நல்ல கதை அமைந்ததால் நண்பனில் நடித்தேன்.
இயக்குனர் ஷங்கருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். அவர் திறமையானவர். அனுஷ்கா உட்பட சக நடிகைகளிடம் இருந்து பாராட்டு கிடைத்தது மகிழ்ச்சி அளித்தது என்று தெரிவித்துள்ளார். |
No comments:
Post a Comment