For Thala Thalapathy Fans



Thursday, January 26, 2012

என் ஃபிரண்ட போல யாரு மச்சான் வெற்றி: விவேகா மகிழ்ச்சி ...


நண்பன் திரைப்படத்தில் வெளியான என் ஃபிரண்ட போல யாரு மச்சான் பாடல் வெற்றி பெற்ற நிலையில் அதன் ஆசிரியர் விவேகா சந்தோசமாக இருக்கிறார்.
காதலைப் பற்றிப் பேச விவாதிக்க கொண்டாட குறிப்பிட்ட வயது என்கிற தகுதி தேவைப்படும். ஆனால் நட்பைப் பற்றிப் பேசவும் கொண்டாடவும் வயது வரம்பு தேவையில்லை.


அதனால் தான் இன்று `என் பிரண்டைப் போல போல யாரு மச்சான்` பாடல் பட்டி தொட்டியெல்லாம் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது.



இந்த ‘நண்பன்’ படப்பாடல் நட்பு வட்டங்களில் நண்பர்கள் உலகத்தில் தேசிய கீதமாகிவிட்டது. நண்பர்களின் உரையாடல்கள், குறுஞ்செய்தி, காலர்ட்யூன், நெட் ஒர்க் விளம்பரம், ஃபேஸ்புக் என்று இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் கொண்டாடி வருகிறார்கள்.


தங்கள் பால்ய கால நினைவுகளில் மூழ்கி, நட்பை உணர்ந்து மகிழ்கிறார்கள். இப்படி ஒரு வெற்றியையும் கொண்டாட்டத்தையும் கொண்ட பாடலை எழுதியிருக்கும் கவிஞர் விவேகாவே எதிர் பார்க்கவில்லை.


வருடத்தின் மிகப்பெரிய வெற்றிப் பாடலாக ‘என் ஃப்ரண்ட போல யாரு மச்சான்’ பாடல் அமைந்துள்ளது.


இந்த வரலாறு காணாத குளிர் காலச் சூழலில் மகிழ்ச்சியின் வெப்பத்தையே போர்வையாக்கிக் கொண்டிருக்கிற விவேகா இந்த அனுபவம் பற்றி கூறும் போது, “நண்பன் பெரிய படம். சங்கர் மாபெரும் இயக்குனர். அவர் பெயரை சொன்னாலே அகில இந்திய வியாபாரம் ஆகிவிடும் அந்த அளவுக்கு வணிக மதிப்புள்ள இயக்குனர்.


அதே போல் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ஒவ்வொரு பாடலையும் வெற்றிப் பாடலாகக் கொடுத்து உச்சத்தில் இருப்பவர்.


விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா, சத்யராஜ், இலியானா போன்ற நட்சத்திர பலம் இப்படி இயல்பாகவே படத்தின் பிரம்மாண்டம் பெரிதாகிவிட்டது. படத்தில் நான் எழுதிய பாடலுக்கு இந்த பெருமையான பிரம்மாண்ட வெளிச்சம் பல மடங்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது.


இது தான் உண்மை. அதற்காக இந்த பாடலை எழுத வாய்ப்பளித்த இயக்குனர் திரு ஷங்கர் அவர்களுக்கும், திரு ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment