என்னுடைய திரையுலக வாழ்க்கையில் நண்பன் திரைப்படத்திற்கு முக்கியமான இடமுள்ளது என்று நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார். |
கொலிவுட்டில் ஷங்கர் இயக்கியுள்ள நண்பன் திரைப்படத்தில் சத்யராஜ் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். ஷங்கரின் இயக்கத்தில் விஜய்யுடன் நடித்த தன்னுடைய அனுபவத்தை சத்யராஜ் கூறியுள்ளார். தொடக்கத்திலேயே நண்பன் திரைப்படத்தில் வழக்கமான சத்யராஜின் தோற்றம் தெரியக்கூடாது. அதே சமயம் இந்தி 'த்ரீ இடியட்சில்' நடித்துள்ள பொம்மன் இரானியின் பாணியும் வந்து விடாமல் கதாப்பாத்திரத்தை வித்தியாசப்படுத்த இயக்குனர் ஷங்கர் கடுமையாக உழைத்துள்ளார். இதுவரையில் இருநூறு படங்களுக்கு மேல் நடித்து விட்ட எனக்கு இனி மேல் என்ன புதுசா செய்ய முடியும் என்ற யோசனை தட்டியது. ஆனால் ஷங்கர் என்னை புதிதாக மாற்றியுள்ளார். என்னுடைய சினிமா வாழ்க்கையில் நண்பனுக்கு முக்கியமான இடமுள்ளது என்று சத்யராஜ் புகழ்ந்துள்ளார். இயல்பாக நடிக்கிற எல்லோரையும் எனக்கு பிடிக்கும். இளையதளபதி விஜய்யும் அந்த வரிசையில் இடம் பிடித்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் முதல் நபராக எனக்கு முன்னாடி தயாராக நிற்பார். பாதி இட்லி சாப்பிடும் போதே படப்பிடிப்பு தயார் என்று அறிவித்தால் உடனே தயாராகி விடுவார் என்று சத்யராஜ், விஜய்யை பாராட்டியுள்ளார். |
For Thala Thalapathy Fans
Thursday, January 12, 2012
என் வாழ்க்கையில் நண்பன் முக்கியமான திரைப்படம்: சத்யராஜ்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment