For Thala Thalapathy Fans



Friday, March 30, 2012

சிறைக் கைதிகளுக்காக திரையிடப்பட்ட நண்பன் ...


மனித நேயத்தை வளர்க்கும் விதத்தில் கைதிகளுக்காக சேலம் சிறையில் விஜய் நடித்த நண்பன் படம் திரையிடப்பட்டது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சேலம் மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதிகளிடையே மனிதநேயத்தை வளர்க்கும் விதத்தில் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அதன் ஒரு படியாக சிறையில் உள்ள கைதிகளுக்கு ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்து வெளியான நண்பன் படம் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது.
படத்தை பார்த்து ரசித்த கைதிகள் மிகுந்த கலகலப்புடன் காணப்பட்டனர். அதன் பின்பு அவர்கள் பல விதமான விளையாட்டுகள் விளையாடி மகிழ்ந்தனர்.
தங்கள் வாழ்க்கையில் செய்த தவறுகளை உணர்ந்து திருந்தி வாழ முயற்சி செய்ய வேண்டும் என்ற மனநிலையை இந்த படம் உருவாக்கியதாகவும் கைதிகள் தெரிவித்தனர்.
நண்பன் படம் திரையிட்டது தொடர்பாக சிறைத்துறை நிர்வாகம் சார்பில் பேசிய அதிகாரி, இது ஒரு முன்னோட்ட நடவடிக்கைதான்.
விரைவில் அனைத்து தமிழக சிறைச்சாலைகளிலும், நல்ல பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படங்களை தெரிவு செய்து ஒளிபரப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் குடும்பத்துடன் சென்று பார்க்கும் வகையிலான படத்தை தெரிவு செய்யும் போது சமீபத்தில் வெளியான நண்பன் படம் முதல் இடத்தில் இருந்தது என்றார்.

Wednesday, March 21, 2012

ரேஸ் ரீமேக்கில் அஜீத் நடிக்கவில்லை: விஷ்ணுவர்தன் ...


கொலிவுட்டில் விஷ்ணுவர்தன் அஜீத்குமாரை வைத்து ரேஸ் பாலிவுட் படத்தை மறுதயாரிப்பு செய்கிறார் என்று தகவல் வெளியாகின.
இப்படத்தில் அஜீத்திற்கு தம்பியாக ஆர்யா நடிக்கிறார் என்று கூடுதல் தகவல் ஒன்றும் வெளியாகின.
ஆனால் இத்தகவலை விஷ்ணுவர்தன் மறுத்திருக்கிறார்.
இது குறித்து விஷ்ணுவர்தன் கூறியிருப்பதாவது, நாங்கள் இப்போது படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம். படத்தின் கதைக்கு ஏற்றவாறு தலைப்பை பரிசிலீத்து வருகிறோம்.
படத்தைப் பற்றிய செய்தியை கொடுக்கும் போது நல்ல ஒரு தலைப்போடு கொடுக்கலாம் என்று நாங்கள் அமைதியாக இருக்கும் காரணத்தால் படத்தினைப் பற்றி பல்வேறு தகவல்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.
கண்டிப்பாக நாங்கள் இணையும் படம் ' ரேஸ் ' படம் அல்ல என்பது மட்டும் உறுதி. ரேஸ் கதைக்கும் எனது கதைக்கும் சம்பந்தம் இல்லை.
பில்லா 2 படப்பிடிப்பில் இருக்கும் போதே எனது படத்தின் கதை கூறி பேசி முடிவு செய்து விட்டோம்.
நான், அஜீத், ஏ.எம்.ரத்னம் மூன்று பேரும் சேர்ந்து தெரிவு செய்த கதை இது. சுரேஷ் மற்றும் பாலா(சுபா) இருவரும் எனக்கு திரைக்கதை அமைக்க உதவி செய்து வருகிறார்கள்.
இப்போதைக்கு எனது படக்குழுவில் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா 'தாண்டவம்' படத்தில் பணியாற்றி வருவதால் இப்படத்தில் பணியாற்றவில்லை. மற்றபடி யுவன், எனது மனைவி அனுவர்தன் உள்ளிட்ட அனைவரும் இப்படத்தில் பணியாற்ற இருக்கிறார்கள்.
எனது தெலுங்கு படமான 'பஞ்சா' படத்தில் பணியாற்றிய வினோத் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருக்கிறார்.

Sunday, March 18, 2012

பாங்காங்கில் துப்பாக்கி படக்குழு .........


கொலிவுட்டில் துப்பாக்கி பாடல்கள் தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் உருவாகி வருகிறது.
இளையதளபதி விஜய், துப்பாக்கி திரைப்படத்திற்காக தனது உடலமைப்பு, பாணி எல்லாவற்றையும் முழுமையாக மாற்றியுள்ளார்.
மும்பையில் எவ்வித தடங்கலும் இல்லாமல் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வந்தது.
தற்போது துப்பாக்கி படத்திற்காக பாங்காக்கில் விஜய், காஜல் அகர்வால் பங்கு பெறும் ஒரு பாடல் காட்சியை படமாக்கி வருகிறார்கள்.
இப்பாடலை இளைய தளபதியே பாடியிருக்கிறார்.
இளைஞர்களின் ரசனையை மனதில் கொண்டு இப்பாடலுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, சென்னையில் இப்படத்தின் பாடலை தயார் செய்தவர்கள், தற்போது அதை பாங்காக்கில் படமாக்கி வருகிறார்கள்.
விஜய் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையிலும், அதே நேரத்தில் தனது பாணியை கைவிடாமல் துப்பாக்கியை முருகதாஸ் இயக்கி வருகிறார்.

Sunday, March 11, 2012

மே 2வது வாரத்தில் திரைக்கு வரும் பில்லா 2 .........


அஜீத் நடிக்கும் பில்லா 2 திரைப்படம் மே 2வது வாரத்தில் திரையிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
அஜீத்குமார் நடிக்கும் பில்லா-2 திரைப்படம் வேகமாக தயாராகி வருகிறது.
இப்படத்தில் பார்வதி ஓமன குட்டன் நாயகியாக நடிக்கிறார். சக்ரி டோலட்டி இயக்குகிறார். தற்போது இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.


வருகிற 13ம் திகதி, தமிழ் புத்தாண்டையொட்டி பில்லா 2 படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.


பின்னர் ஏப்ரல் 27ம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அஜீத்தின் பிறந்தநாள் கொண்டாட்டமாக மே 1ம் திகதி அன்று வெளியீட்டுத் திகதி மாற்றப்பட்டது.


ஆனால் பெப்சி தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் டப்பிங், கிராபிக்ஸ், ரீ ரிக்கார்டிங் போன்ற வேலைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து மே 2வது வாரத்தில் பில்லா 2 திரையிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Friday, March 9, 2012

Ajith to start a NGO?


This has become the talk of the town! It is said that the Thala who disbanded his fans club not so while ago is toying with the idea of starting a NGO and the good samaritan in him needs no introduction so this doesn't really come as a shocker.

"Ajith is considering starting a NGO for the needy. Last birthday he announced that he is disbanding his fans club and also expressed that audience and fans will watch his movies and encourage them as long as they are quality ventures even if he doesn't have a fans club and the moolah Mankatha raked in needs no talking about. Since his fans aren't able to do good through a fans club he is considering starting a NGO for helping those in the need", says sources.

Ajith is currently busy with work on 'Billa 2' a prequel to blockbuster 'Billa' that's touted to grace the screens on April 27. The film is eagerly awaited due to reasons many and the team is currently busy with post-production work on the film. A teaser is expected by the end of this month.
If all goes well Ajith will make a formal announcement about his NGO plans.

Thursday, March 8, 2012

அஜித்தை வைத்து படம் இயக்க போட்டி போடும் திரைப்பட இயக்குநர்கள் ..


ரேஸ் என்னும் இந்தி பட ரீமேக்கில் அஜீத்தை வைத்து படம் இயக்க மூன்று இயக்குனர்களிடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.
இந்தியில் சைப் அலிகான் நடித்து மிகவும் வெற்றி பெற்ற த்ரில்லர் நிறைந்த திரைப்படம் ரேஸ்.


இந்த படத்தை தமிழில் அஜீத்தை வைத்து தயாரிக்க மும்பை பட நிறுவனம் ஒன்று திட்டமிட்டுள்ளது. அஜீத் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகின்றார்.
இதையடுத்து விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் ரேஸ் ரீமேக்கை இயக்கும் பொறுப்பை விஷ்ணுவர்தனிடம் தரலாமா என சிவா ஆலோசித்து வருகிறார்.


அதே நேரம், மங்காத்தாமூலம் தனக்கு பெரிய ஹிட் தந்த வெங்கட் பிரபுவுக்கு வாய்ப்பு தரலாமா என்றும் அஜீத் யோசிக்கிறாராம். சமீபத்தில் டுவிட்டரில் மீண்டும் அஜீத்துடன் பணியாற்ற விரும்புகிறேன் என நாசுக்காக அஜீத்திற்கு தகவல் அனுப்பியிருந்தார் வெங்கட் பிரபு.


இதற்கிடையே மும்பை பட நிறுவனம், பிரபுதேவாவை இயக்குனராக தேர்வு செய்ய விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அஜீத்தை இயக்குவது யார் என்பதில் மூன்று இயக்குனர்களிடையே கடும் போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

துப்பாக்கியில் ஜெய் நடிக்க வில்லை: முருகதாஸ் ..


கொலிவுட்டில் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தில் ஜெய் நடிப்பதாக வெளியான செய்தியை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்துள்ளார்.
பகவதி படத்தில் விஜய் தம்பியாக நடித்த ஜெய், மீண்டும் துப்பாக்கி படத்தில் விஜய் தம்பியாக நடிக்கிறார் என்ற செய்தி திரையுலகில் வலம் வந்தது.
இந்த விடயத்தை நாயகன் ஜெய் உறுதிபடுத்திய நிலையில், துப்பாக்கி இயக்குனர் முருகதாஸ் மறுத்துள்ளார்.


இதுகுறித்து முருகதாஸ் அளித்துள்ள பேட்டியில், என்னுடைய துப்பாக்கி படத்தில் விஜய் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.
கதைப்படி அவருக்கு தம்பி வேடமே இல்லை. 


இந்நிலையில் ஜெய், விஜய்க்கு தம்பியாக நடிக்கிறார் என்று தவறான செய்தி கொலிவுட்டில் வெளியாகியுள்ளது என்று முருகதாஸ் கூறியுள்ளார்.
தற்போது துப்பாக்கி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மும்பையில் நடைபெற்று வருகிறது. என்கவுண்டர் சிறப்பு பொலிஸ் அதிகாரியாக விஜய் துப்பாக்கியில் நடிக்கிறார்.