கொலிவுட்டில் விஜய் நடிக்கும் துப்பாக்கி படத்தில் ஜெய் நடிப்பதாக வெளியான செய்தியை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்துள்ளார். |
பகவதி படத்தில் விஜய் தம்பியாக நடித்த ஜெய், மீண்டும் துப்பாக்கி படத்தில் விஜய் தம்பியாக நடிக்கிறார் என்ற செய்தி திரையுலகில் வலம் வந்தது. இந்த விடயத்தை நாயகன் ஜெய் உறுதிபடுத்திய நிலையில், துப்பாக்கி இயக்குனர் முருகதாஸ் மறுத்துள்ளார். இதுகுறித்து முருகதாஸ் அளித்துள்ள பேட்டியில், என்னுடைய துப்பாக்கி படத்தில் விஜய் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கதைப்படி அவருக்கு தம்பி வேடமே இல்லை. இந்நிலையில் ஜெய், விஜய்க்கு தம்பியாக நடிக்கிறார் என்று தவறான செய்தி கொலிவுட்டில் வெளியாகியுள்ளது என்று முருகதாஸ் கூறியுள்ளார். தற்போது துப்பாக்கி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மும்பையில் நடைபெற்று வருகிறது. என்கவுண்டர் சிறப்பு பொலிஸ் அதிகாரியாக விஜய் துப்பாக்கியில் நடிக்கிறார். |
For Thala Thalapathy Fans
Thursday, March 8, 2012
துப்பாக்கியில் ஜெய் நடிக்க வில்லை: முருகதாஸ் ..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment