அஜீத் நடிக்கும் பில்லா 2 திரைப்படம் மே 2வது வாரத்தில் திரையிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். |
அஜீத்குமார் நடிக்கும் பில்லா-2 திரைப்படம் வேகமாக தயாராகி வருகிறது. இப்படத்தில் பார்வதி ஓமன குட்டன் நாயகியாக நடிக்கிறார். சக்ரி டோலட்டி இயக்குகிறார். தற்போது இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. வருகிற 13ம் திகதி, தமிழ் புத்தாண்டையொட்டி பில்லா 2 படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். பின்னர் ஏப்ரல் 27ம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அஜீத்தின் பிறந்தநாள் கொண்டாட்டமாக மே 1ம் திகதி அன்று வெளியீட்டுத் திகதி மாற்றப்பட்டது. ஆனால் பெப்சி தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் டப்பிங், கிராபிக்ஸ், ரீ ரிக்கார்டிங் போன்ற வேலைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மே 2வது வாரத்தில் பில்லா 2 திரையிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். |
For Thala Thalapathy Fans
Sunday, March 11, 2012
மே 2வது வாரத்தில் திரைக்கு வரும் பில்லா 2 .........
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment