இந்தியில் சைப் அலிகான் நடித்து மிகவும் வெற்றி பெற்ற த்ரில்லர் நிறைந்த திரைப்படம் ரேஸ்.
இந்த படத்தை தமிழில் அஜீத்தை வைத்து தயாரிக்க மும்பை பட நிறுவனம் ஒன்று திட்டமிட்டுள்ளது. அஜீத் தற்போது சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகின்றார்.
இதையடுத்து விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் ரேஸ் ரீமேக்கை இயக்கும் பொறுப்பை விஷ்ணுவர்தனிடம் தரலாமா என சிவா ஆலோசித்து வருகிறார்.
அதே நேரம், மங்காத்தாமூலம் தனக்கு பெரிய ஹிட் தந்த வெங்கட் பிரபுவுக்கு வாய்ப்பு தரலாமா என்றும் அஜீத் யோசிக்கிறாராம். சமீபத்தில் டுவிட்டரில் மீண்டும் அஜீத்துடன் பணியாற்ற விரும்புகிறேன் என நாசுக்காக அஜீத்திற்கு தகவல் அனுப்பியிருந்தார் வெங்கட் பிரபு.
இதற்கிடையே மும்பை பட நிறுவனம், பிரபுதேவாவை இயக்குனராக தேர்வு செய்ய விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அஜீத்தை இயக்குவது யார் என்பதில் மூன்று இயக்குனர்களிடையே கடும் போட்டி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. |
No comments:
Post a Comment