கொலிவுட்டில் விஷ்ணுவர்தன் அஜீத்குமாரை வைத்து ரேஸ் பாலிவுட் படத்தை மறுதயாரிப்பு செய்கிறார் என்று தகவல் வெளியாகின. |
இப்படத்தில் அஜீத்திற்கு தம்பியாக ஆர்யா நடிக்கிறார் என்று கூடுதல் தகவல் ஒன்றும் வெளியாகின. ஆனால் இத்தகவலை விஷ்ணுவர்தன் மறுத்திருக்கிறார். இது குறித்து விஷ்ணுவர்தன் கூறியிருப்பதாவது, நாங்கள் இப்போது படத்தின் திரைக்கதை அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம். படத்தின் கதைக்கு ஏற்றவாறு தலைப்பை பரிசிலீத்து வருகிறோம். படத்தைப் பற்றிய செய்தியை கொடுக்கும் போது நல்ல ஒரு தலைப்போடு கொடுக்கலாம் என்று நாங்கள் அமைதியாக இருக்கும் காரணத்தால் படத்தினைப் பற்றி பல்வேறு தகவல்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. கண்டிப்பாக நாங்கள் இணையும் படம் ' ரேஸ் ' படம் அல்ல என்பது மட்டும் உறுதி. ரேஸ் கதைக்கும் எனது கதைக்கும் சம்பந்தம் இல்லை. பில்லா 2 படப்பிடிப்பில் இருக்கும் போதே எனது படத்தின் கதை கூறி பேசி முடிவு செய்து விட்டோம். நான், அஜீத், ஏ.எம்.ரத்னம் மூன்று பேரும் சேர்ந்து தெரிவு செய்த கதை இது. சுரேஷ் மற்றும் பாலா(சுபா) இருவரும் எனக்கு திரைக்கதை அமைக்க உதவி செய்து வருகிறார்கள். இப்போதைக்கு எனது படக்குழுவில் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா 'தாண்டவம்' படத்தில் பணியாற்றி வருவதால் இப்படத்தில் பணியாற்றவில்லை. மற்றபடி யுவன், எனது மனைவி அனுவர்தன் உள்ளிட்ட அனைவரும் இப்படத்தில் பணியாற்ற இருக்கிறார்கள். எனது தெலுங்கு படமான 'பஞ்சா' படத்தில் பணியாற்றிய வினோத் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருக்கிறார். |
For Thala Thalapathy Fans
Wednesday, March 21, 2012
ரேஸ் ரீமேக்கில் அஜீத் நடிக்கவில்லை: விஷ்ணுவர்தன் ...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment