For Thala Thalapathy Fans



Sunday, August 26, 2012

துப்பாக்கி படத்திற்கு மீண்டும் தடை நீட்டிப்பு ......

முருதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் துப்பாக்கி படத்தின் தலைப்புக்கு மீண்டும் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி என்ற பெயரில் உருவாகி வரும் இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.
கடந்த வருடம் டிசம்பரில் இப்படத்திற்கான தலைப்பும் அதற்கான வடிவமைப்பும் உருவாக்கப்பட்டது.

இதற்கிடையே கள்ளத்துப்பாக்கி என்ற பெயரில் படமொன்றை தயாரித்து வரும் நார்த் இஸ்ட் பிலிம் ஓர்க்ஸ் நிறுவனம் துப்பாக்கி படத்திற்கெதிராக சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றம் 2-ல் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி திருமகள், `துப்பாக்கி' படத்தின் தலைப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இந்தத் தடை பல்வேறு காரணங்களால் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.
நேற்று இந்த வழக்கு நீதிபதி திருமகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது எதிர்மனுதாரர் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை செப்ரெம்பர் 10ம் திகதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை `துப்பாக்கி' படத்தின் தலைப்புக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீட்டிக்கும் என உத்தரவிட்டார்.
தொடரும் தடை காரணமாக, துப்பாக்கி படத்தின் பணிகள் மற்றும் பாடல் வெளியீடு தாமதமாகி வருகிறது.

Saturday, August 25, 2012

தல-வாலு சந்திப்பு........

தல அஜித்குமாரும் வாலு சிம்புவும் மும்பையில் சந்தித்து நட்பை பரிமாறிக் கொண்டனர். 
அஜித்குமாரின் தீவிர ரசிகரான சிம்பு, தன் படங்களில் அஜித் பற்றிய ஏதாவது ஒரு தகவலை நினைவுபடுத்துவார்.
மன்மதன், சிலம்பாட்டம் போன்ற படங்கள் இதற்கு சிறந்த உதாரணங்கள். இந்நிலையில் சமீபத்தில் அஜித்தும் சிம்புவும் மும்பையில் சந்தித்துக்கொண்டனர்.
இருவரும் சந்தித்துக்கொண்ட போது உடல் நலம் மற்றும் உடற்பயிற்சி குறித்து நலம் விசாரித்துள்ளனர்.
போடா போடி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி மும்பையில் நடைபெற்றது. இதற்காக சிம்பு மும்பை வந்தார்.
இதற்கிடையே ஸ்ரீ தேவி நடித்துள்ள English Vinglish படத்திற்காக அஜித் குமார் மும்பை வந்திருந்தபோதே இந்த விஷேட சந்திப்பு ஏற்பட்டது.
தற்போது சிம்பு, வாலு படத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். இது குறித்து சிம்பு, வாலு படத்தின் எடிட் செய்யப்பட்ட காட்சிகளை பார்த்தேன். படம் நன்றாக வந்திருக்கிறது.
இயக்குனர் விஜய் சந்தர், எடிட்டர் சுரேஷ் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள் என்றார்.
மேலும் வாலு படத்தில் இடம்பெற்றுள்ள லவ்ன்னுறவன் நீ யாருடா? என் முன்னாடி வந்து நின்னு பாருடா என்ற பாடல் விரைவில் வெளியாக உள்ளது.

ஏக் தா டைகர் படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய்...........

சல்மான்கான் நடித்து இந்தியில் சமீபத்தில் வெளியாகியுள்ள ஏக் தா டைகர் படத்தின் தமிழ் ரீமேக்கில் விஜய் நடிக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாலிவுட்டில் சமீபத்தில் அதிக வசூலைக் குவித்துள்ள படம் ஏக் தா டைகர்.
கபீர் கான் இயக்கிய இந்தப் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்தாலும், படம் வசூலில் சாதித்துவிட்டது.

இப்போதே இந்தப் படத்தை தெலுங்கில் ரீமேக்கும் வேலையை ஆரம்பித்து விட்டார்கள்.

எனவே தமிழிலும் ரீமேக் செய்ய முடிவெடுத்து, ரீமேக் ஸ்பெஷலிஸ்டான ஜெயம் ராஜாவை வைத்து இந்தப் படத்தை தமிழில் எடுக்க எடிட்டர் மோகன் முயற்சி மேற்கொண்டுள்ளாராம். கதாநாயகனாக நடிக்க விஜய்யிடம் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.

விஜய்யும் ராஜாவும் ஏற்கெனவே வேலாயுதம் படத்தில் இணைந்து வெற்றிக் கொடி நாட்டியவர்கள் தான்.
கௌதம் மேனனின் யோஹனிலிருந்து விலகியுள்ளதால், அந்த திகதிகளை ஜெயம் ராஜாவுக்கு தர விஜய் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Saturday, August 18, 2012

சட்டம் ஒரு இருட்டறை படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி அளித்த விஜய் ........

சட்டம் ஒரு இருட்டறை படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று, அங்குள்ளவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் இளைய தளபதி விஜய்.
சட்டம் ஒரு இருட்டறை ரீமேக் படத்தின் படப்பிடிப்பு சென்னை தரமணியில் உள்ள திரைப்பட நகரத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த படப்பிடிப்பு தளத்திற்கு விஜய் திடீர் விஜயம் செய்தார். அவரது வருகையை சற்றும் எதிர்பாராத படக்குழுவினர் இன்ப அதிர்ச்சியில் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.
அப்போது "என்னைப் பார்த்ததும் ஏன் வேலை எல்லாம் அப்படியே நிற்கிறது? நடக்கட்டும். நான் வேடிக்கை பார்க்கிறேன்" என்று இயக்குனர் சினேகா பிரிட்டோவிடம் இயல்பாக சொல்லிவிட்டு அமர்ந்து கொண்டார்.
இயக்குனர் சினேகா பிரிட்டோவை அருகில் அழைத்து, "ஷாட் எடுங்கள்" என்று ஊக்கப்படுத்திய விஜய், நடன இயக்குனர் ராபர்ட்டைப் பார்த்து, ஸ்டெப் சொல்லிக் கொடுங்கள் என்றார்.
"நிமிர்ந்து நில், துணிந்து செல்" என்ற பாடல் ஒலிக்க, நடன அசைவுகளைப் பார்த்த விஜய் நடன இயக்குனருக்கு பாராட்டு தெரிவித்தார்.
அப்போது படத்தொகுப்பாளர் ராஜேஷ் அதுவரை எடுத்த காட்சிகளை மடிக்கணனியில் எடிட் பண்ணிக்காட்டி தன் பங்குக்கு பாராட்டுகளை வாங்கிக் கொண்டார்.
அந்த நேரத்தில் "நானும் உள்ளேன் ஐயா" என்று ஃபிரேமுக்குள் நுழைந்த ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமாருக்கும் பாராட்டு கிடைத்தது.
"அது சரி, இது என்ன? பாடல் காட்சியை படமாக்கி கொண்டிருக்கிறீர்கள்? பெரிய செட் எதுவுமே போடவில்லையா?" என்று வினாவும் வியப்புமாக இயக்குனர் சினேகா பிரிட்டோவிடம் கேள்வி எழுப்பினார் விஜய்.
அதற்கு, அதுதான் எங்கள் கலை இயக்குனர் வனராஜின் கைவண்ணம். செட் போடாதது போல் இயற்கையான சூழலை ஏற்படுத்தி இருக்கிறார் என்றார் இயக்குனர் சினேகா பிரிட்டோ.
மேலும், தமிழ் சினிமாவில் நீண்ட இடைவேளைக்கு பிறகு லேசர் ஒளியை பயன்படுத்தி நடனக்காட்சியை எடுக்கிறோம். அது மட்டுமின்றி 40க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களுடன் கதாநாயகி பிந்து மாதவியும், கதாநாயகன் தருண்குமாரும் ஆடும் இந்த பாடல் காட்சிக்காக 20க்கும் மேற்பட்ட மும்பை நடனக் கலைஞர்களை வரவழைத்திருக்கிறோம்.
இந்த நடனக் காட்சி தமிழ் சினிமாவில் ஒரு மைக்கல்லாக அமையும் என்று கூறினார்.
சட்டம் ஒரு இருட்டறை ரீமேக் படத்தை எஸ்தெல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், விமலா ராணி தயாரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

11 ஜோடிகளுக்கு விஜய் தலைமையில் இலவச திருமணம் .....

 இளையதளபதி விஜய்யின் நற்பணி மன்றம் மற்றும் மக்கள் இயக்கம் பல நற்பணிகளை செய்துவருகிறது.
அந்த வகையில் வேலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் மற்றும் ரசிகர் மன்றம் சார்பில் சத்துவாச்சாரி ரங்காபுரம் கிஷ்ணா திருமண மண்டபத்தில் நாளை 11 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற உள்ளது.

இதில் நடிகர் விஜய் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைக்கிறார். அவரது மனைவி சங்கீதா, தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்து கொள்கின்றனர்.

திருமணம் முடிந்ததும் 11 ஜோடிகளுக்கு 51 வகையான சீர்வரிசை பொருட்களை விஜய் வழங்குகிறார். 

இதனையடுத்து மணமக்கள் குடும்பத்துடன் விஜய் புகைப்படம் எடுத்து கொள்கிறார்.

விஜய் வருவதையொட்டி அவரது ரசிகர்கள் வேலூர், காட்பாடி பகுதிகளில் வரவேற்பு பேனர்கள் வைத்துள்ளனர்.

திருமணம் நடைபெறும் ரங்காபுரம் பகுதியில் மக்கள் இயக்க கொடி தோரணங்கள் கட்டியுள்ளனர்.

 இதனால் வேலூர் விழாக்கோலம் பூண்டுள்ளது. நடிகர் விஜய்க்கு மேளதாளத்துடன் பிரமாண்ட வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

இயக்குனரை பிரமிக்க வைத்த அஜித் ..........

தன் உடல் எடையை பெருமளவு குறைத்து இயக்குனர் விஷ்ணுவர்தனை அஜித்குமார் பிரமிக்க வைத்திருக்கிறார்.
பில்லா படத்திற்கு பிறகு புதிய படமொன்றில் அஜித்குமாருடன் விஷ்ணுவர்தன் இணைந்து பணியாற்றி வருகின்றார்.

இப்படத்தில் அஜித், மிகவும் இளமையாக தெரிய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதன்காரணமாக உடல் எடையை குறைக்க முடிவு செய்தார்.

இதற்காக அஜித் வெறும் 15 நாட்களேயே எடுத்துக்கொண்டுள்ளார். தினமும் 6 மணி நேரம் உடற்பயிற்சி நிலையத்தில் கடுமையாக பயிற்சி செய்த அஜித், 15 நாட்களுக்கு பின்பு விஷ்ணுவை சந்தித்திருக்கிறார்.

அப்போது தன் திரைக்கதைக்கு தகுந்தாற்போல அஜித் உடல் எடையை குறைத்து வந்திருக்கிறார் என விஷ்ணுவர்தனுக்கு ஒரே ஆச்சர்யம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து விஷ்ணுவர்தன், சினிமா துறைக்கு வந்து 20 ஆண்டுகள் கடந்தும் அஜித்தின் ஈடுபாடு என்னை பிரமிக்க வைத்தது. 15 நாட்களுக்குள் உடல் எடையை குறைத்து வருகிறேன் என்று கூறியவர், தன்னுடைய வார்த்தையை காப்பற்றி விட்டார் என்றார்.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அவரே இப்படத்திற்கு உதவி இயக்குனராகவும் பணியாற்றுகின்றார்.

நான் இயக்குனராக விஜய்தான் காரணம்: பரதன்


கொலிவுட்டில் அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய பரதன், தற்போது புதிய படமொன்றில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.
தன்னுடைய முதல் படத்திலேயே இளைய தளபதி விஜய், ஏ.ஆர்.ரஹ்மான் என இரு பெரும்புள்ளிகளோடு பணியாற்றிய இவர், சிறந்த வசனகர்த்தாவும் ஆவார்.
கொலிவுட்டில் தில், தூள், கில்லி போன்ற படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியதன் மூலமே இயக்குனர் துறைக்கு வந்ததாக நமது ஊடக பேட்டியில் தெரிவித்தார்.


அழகிய தமிழ் மகன் ரசிகர்களிடத்தில் வரவேற்பு பெறாதது ஏன்? என்ற கேள்விக்கு பதிலளித்த பரதன், வசூலில் மட்டும்தான் வெற்றி பெறவில்லை என்றும் மற்றபடி ரசிகர்கள் மனதில் அழுத்தமாக இப்படம் பதிந்ததாக கூறினார்.

இன்று வரை இப்படத்தை பார்க்கும் ஒவ்வொரு ரசிகரும் தமக்கு பாராட்டுக்கள் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
தற்போது புதிய படமொன்றிற்கு திரைக்கதை, வசனம் எழுதிக் கொண்டிருப்பதாக தெரிவித்த பரதன், இனி வரும் காலங்களில் ரசிகர்களுக்கு வித்தியாசமான கோணங்களில் படங்களை தர உள்ளதாக தெரிவித்தார்.
தான் இயக்குனராக வந்ததற்கு முக்கிய காரணமாக இளைய தளபதி விஜய்யை குறிப்பிட்டார் இயக்குனர் பரதன்.

3 விஜய் இணையும் அதிரடி திரைப்படம்.....

கொலிவுட்டில் முதன்முறையாக 3 விஜய் இணைந்து ஒரு அதிரடி படத்தில் பணியாற்ற உள்ளனர் என சூடான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இளையதளபதி விஜய் நடிக்கும் இப்படத்தை இயக்குனர் விஜய் இயக்க உள்ளார்.
இதற்கான முறையான அறிவிப்புகள் இன்னும் வெளிவரா விட்டாலும் கொலிவுட்டில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதராசபட்டிணம், தெய்வத்திருமகள் படத்தின் மூலமாக முன்னணி இயக்குனர்கள் வரிசையில் இடம்பிடித்துள்ளார் இயக்குனர் விஜய்.

தற்போது தாண்டவம் என்ற அதிரடி திரைப்படத்தை சியான் விக்ரமை வைத்து இயக்கியிருக்கிறார். இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா (ஓகஸ்ட் 15) இன்று நடைபெறுகின்றது.

இந்நிலையில் இளைய தளபதி விஜய்யும் இயக்குனர் விஜய்யும் புதிய படமொன்றில் இணைந்து பணியாற்ற உள்ளனர்.

இதில் 3 வது விஜய் யார் என்று தெரியுமா? இவர் நம் அனைவருக்கும் தெரிந்த பாடகர் விஜய் யேசுதாஸ்தான். துப்பாக்கி திரைப்படத்தினை அடுத்து இளையதளபதியின் அடுத்தபடம் இதுவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.