கொலிவுட்டில் முதன்முறையாக 3 விஜய் இணைந்து ஒரு அதிரடி படத்தில் பணியாற்ற உள்ளனர் என சூடான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. |
இளையதளபதி விஜய் நடிக்கும் இப்படத்தை இயக்குனர் விஜய் இயக்க உள்ளார். மதராசபட்டிணம், தெய்வத்திருமகள் படத்தின் மூலமாக முன்னணி இயக்குனர்கள் வரிசையில் இடம்பிடித்துள்ளார் இயக்குனர் விஜய். தற்போது தாண்டவம் என்ற அதிரடி திரைப்படத்தை சியான் விக்ரமை வைத்து இயக்கியிருக்கிறார். இப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா (ஓகஸ்ட் 15) இன்று நடைபெறுகின்றது. இந்நிலையில் இளைய தளபதி விஜய்யும் இயக்குனர் விஜய்யும் புதிய படமொன்றில் இணைந்து பணியாற்ற உள்ளனர். இதில் 3 வது விஜய் யார் என்று தெரியுமா? இவர் நம் அனைவருக்கும் தெரிந்த பாடகர் விஜய் யேசுதாஸ்தான். துப்பாக்கி திரைப்படத்தினை அடுத்து இளையதளபதியின் அடுத்தபடம் இதுவாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. |
For Thala Thalapathy Fans
Saturday, August 18, 2012
3 விஜய் இணையும் அதிரடி திரைப்படம்.....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment