தன்னுடைய முதல் படத்திலேயே இளைய தளபதி விஜய், ஏ.ஆர்.ரஹ்மான் என இரு பெரும்புள்ளிகளோடு பணியாற்றிய இவர், சிறந்த வசனகர்த்தாவும் ஆவார்.
கொலிவுட்டில் தில், தூள், கில்லி போன்ற படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியதன் மூலமே இயக்குனர் துறைக்கு வந்ததாக நமது ஊடக பேட்டியில் தெரிவித்தார்.
அழகிய தமிழ் மகன் ரசிகர்களிடத்தில் வரவேற்பு பெறாதது ஏன்? என்ற கேள்விக்கு பதிலளித்த பரதன், வசூலில் மட்டும்தான் வெற்றி பெறவில்லை என்றும் மற்றபடி ரசிகர்கள் மனதில் அழுத்தமாக இப்படம் பதிந்ததாக கூறினார்.
இன்று வரை இப்படத்தை பார்க்கும் ஒவ்வொரு ரசிகரும் தமக்கு பாராட்டுக்கள் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
தற்போது புதிய படமொன்றிற்கு திரைக்கதை, வசனம் எழுதிக் கொண்டிருப்பதாக தெரிவித்த பரதன், இனி வரும் காலங்களில் ரசிகர்களுக்கு வித்தியாசமான கோணங்களில் படங்களை தர உள்ளதாக தெரிவித்தார்.
தான் இயக்குனராக வந்ததற்கு முக்கிய காரணமாக இளைய தளபதி விஜய்யை குறிப்பிட்டார் இயக்குனர் பரதன். |
No comments:
Post a Comment