For Thala Thalapathy Fans



Wednesday, February 29, 2012

அஜீத்குமாரை புகழ்ந்த பார்வதி ஓமனகுட்டன் .......


ஷக்ரி டோலட்டி இயக்கத்தில் பில்லா 2 படத்தில் நடித்துள்ள 'தல' அஜித்தை, படத்தின் நாயகி பார்வதி ஓமனகுட்டன் புகழ்ந்து பேசியுள்ளார்.
பாலிவுட் படத்தில் நடித்துள்ள பார்வதி,  கொலிவுட்டில் அஜித்தின் பில்லா 2 படத்தில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
நான் பாலிவுட் படத்தில் நடித்ததால் திரையுலக பாடம் கற்றேன்.


 நட்சத்திர நடிகர்களுடன் சேர்ந்து நடித்தால் திரையுலகில் வேகமாக பிரபலமாகலாம் என்ற விடயத்தை பாலிவுட் படங்களிலிருந்து கற்றுக்கொண்டேன்.


அந்த வகையில் பில்லா படம் எனக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளும் போது, ஆரம்பத்தில் எனக்குள் இனம் புரியாத நடுக்கும் ஏற்பட்டது.


வீட்டில் மலையாளம் பேசிப் பழக்கப்பட்ட நான், தமிழில் நடிக்கும் போது தடுமாறினால் என்ன செய்வது என்று தயங்கினேன்.


இருப்பினும் எனக்கு பிடித்தமான நாயகன் அஜித்துடன் இணைந்து நடிப்பதால் நான் உற்சாகமடைந்தேன்.


அவருடன் இணைந்து பணியாற்றியது மறக்கமுடியாத அனுபவமாகும். பாரபட்சமின்றி அனைவரையும் மதிக்கும் அவரின் குணத்தைக் கண்டு வியப்படைந்தேன் என்று நாயகி பார்வதி ஓமனகுட்டன் தெரிவித்துள்ளார்.

Tuesday, February 28, 2012

மார்ச் மாதத்தில் வெளிவரும் பில்லா 2 இசை ....


கொலிவுட்டில் அஜீத்குமார் நடித்துள்ள “பில்லா 2” திரைப்படத்திற்கான இசையை அடுத்த மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
அஜீத்குமார், பார்வதி ஓமணக்குட்டன், ரகுமான், பிரபு நடித்துள்ள பில்லா 2 திரைப்படத்திற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
பில்லா 2 திரைப்படத்தின் இறுதிக்காட்சியை ஜார்ஜியா பனிமலையில் படக்குழுவினர் படமாக்கியுள்ளார்கள்.


பில்லா 2 திரைப்படத்திற்கு இசையமைக்கும் யுவன் ஷங்கர் ராஜா, தீம் பாடலை உருவாக்குவதற்கு நீண்ட நாட்கள் பணியாற்றியுள்ளார்.


இந்நிலையில் பில்லா 2 படம் குறித்து படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான Sunir Kheterpal கூறியிருப்பது, இசை வெளியீடு மார்ச் மாத கடைசியில் இருக்கும்.


டிரெய்லர்கள் தயாராகி வருகின்றன. மார்ச் 15க்குப் பிறகு தியேட்டர்களில் டிரெய்லர்கள் வெளியிடப்படும்.


மார்ச் மாதம் முதல் படத்திற்கான விளம்பரப் பணிகளை தொடங்க இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு துப்பாக்கியில் பாடும் இளைய தளபதி ......


துப்பாக்கி திரைப்படத்திற்காக இளைய தளபதி விஜய், ஒரு பாடல் பாட சம்மதம் தெரிவித்துள்ளார்.
கொலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், துப்பாக்கி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
துப்பாக்கியில் விஜய்யுடன் காஜல் அகர்வால் இணைகிறார். ஹாரிஸ் ஜெயராஸ் இசையமைக்கிறார்.


இந்நிலையில் இளையதளபதி விஜய், துப்பாக்கி திரைப்படத்திற்காக பாடல் ஒன்று பாட, சம்மதம் தெரிவித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் தன்னுடைய இசையில் வெளிவரும் ஒரு பாடலுக்கு விஜய் பாடினால் நன்றாக இருக்கும் என்ற கருத்தை முருகதாசிடம் தெரிவித்துள்ளார்.


இயக்குனர் முருகதாஸ் இந்த விடயத்தை விஜய்யிடம் தெரிவிக்க, உடனே விஜய் சம்மதம் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இளைய தளபதி, பத்ரி, சச்சின் உட்பட சில படங்களுக்கு பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நீண்ட வருடங்களுக்குப் பிறகு விஜய், தற்போது துப்பாக்கியில் பாட உள்ளார்.

Monday, February 27, 2012

துப்பாக்கி படப்பிடிப்பு தொடங்கியது............


பெப்ஸி தொழிலாளர் பிரச்சினையால் ரத்து செய்யப்பட்டிருந்த துப்பாக்கி படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.
கொலிவுட்டில் நண்பன் திரைப்படத்திற்கு பின்பு விஜய் துப்பாக்கி திரைப்படத்தில் நடித்துவருகிறார்.


காஜல் அகர்வால் விஜய்க்கு ஜோடியாக நடிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் துப்பாக்கியை இயக்கி வருகிறார்.


சமீபத்தில் ஏற்பட்ட தயாரிப்பாளர்-பெப்ஸி தொழிலாளர் பிரச்சினையால் துப்பாக்கி படப்பிடிப்பு தடை செய்யப்பட்டிருந்தது.


இந்நிலையில் ரத்துசெய்யப்பட்ட படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியதாக, கொலிவுட்டிலிருந்து தகவல் வெளியாகியுள்ளன.


துப்பாக்கியில் இளையதளபதி விஜய், என்கவுன்டர் பொலிஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

Sunday, February 26, 2012

அலுவலகத்திற்கு வாஸ்து பார்க்கும் அஜித்குமார்...


தல அஜித்குமார், தனது அலுவலகத்திற்கு வாஸ்து பார்த்து மாற்றிக்கொண்டிருக்கிறார்.
மங்காத்தா வெற்றிக்குப் பின்பு தல அஜித்குமார், சினிமாவில் பரபரப்பாக நடிக்க தொடங்கி விட்டார்.


இந்நிலையில் ஆழ்வார் பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தை தொழில்நுட்பத்துடன் கூடிய அலுவலமாக மாற்ற முயற்சி செய்துள்ளார்.


மேலும் வாஸ்துபடியும் அலுவலகத்தை மாற்ற உள்ளார். தற்போது அஜித்குமார் பில்லா 2 படத்தில் நடித்துவருகிறார்.


இதையடுத்து மீண்டும் வெங்கட்பிரபுவுடன் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.


படப்பிடிப்பு அல்லாத நேரங்களில், அஜீத் தனது மகள் அனோஷ்காவிடம் பேசி மகிழ்கிறார். அவரது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்காவை பலகோணங்களில் புகைப்படம் எடுத்து மகிழ்கிறார்.

சந்தோஷ் சிவனுடன் இணையும் விஜய் .....


ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் அடுத்த படத்தில் இளையதளபதி விஜய் நடிக்க உள்ளார்.
கொலிவுட்டில் நண்பன் படத்தினை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி படத்தில் நாயகன் விஜய் நடித்து வருகிறார்.
துப்பாக்கியில் விஜய்யுடன் காஜல் அகர்வால் நடித்து வருகிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.
முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. பெப்ஸி பிரச்சினையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. விரைவில் இரண்டம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சந்தோஷ் சிவனின் வேகமான மற்றும் துல்லியமான ஒளிப்பதிவை பார்த்த விஜய், துப்பாக்கி படத்தினைத் தொடர்ந்து தனது திகதிகளை சந்தோஷ் சிவன் இயக்கும் படத்திற்கு கொடுத்து இருக்கிறார்.
ஆனால் இப்படத்தினை தயாரிக்கும் நிறுவனம் குறித்து இன்னும் முடிவாகவில்லை.

Monday, February 20, 2012

பில்லா-2 புகைப்படங்கள் பில்லா-2 புகைப்படங்கள் ........






ஊடகங்களுக்கு வழங்காத நிலையில் பில்லா 2 புகைப்படங்கள் வெளியானது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கொலிவுட்டில் அஜீத்தின் பில்லா- 2 படப்பிடிப்பு கடந்த சூலை மாதம் தொடங்கியது. வருகிற மே மாதம் படத்தை திரையிட படக்குழு முடிவுசெய்துள்ளது.


இதில் அஜீத் ஜோடியாக பார்வதி ஒமனகுட்டன் நடிக்கிறார். பிரபு, ரகுமான், புரூனா அப்துல்லா, வித்யுத் ஜம்வால், மனோஜ் கே.ஜெயன் ஆகியோரும் நடிக்கின்றனர்.


யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். சக்ரி டோலட்டி இயக்குகிறார். ரூ.30 கோடி பட்ஜெட்டில் தயாராவதாக கூறப்படுகிறது.
இந்த படத்தின் கதை மற்றும் நடிகர், நடிகைகளின் கெட்டப்புகள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தன.


இதுவரை பில்லா 2 புகைப்படங்களை பத்திரிகைகளுக்கு அளிக்கவில்லை. ஆனால் இப்படத்தின் புகைப்படங்கள் திடீரென இணையதளத்தில் வெளியாகியுள்ளன.


இப்படங்களை பார்த்து அஜீத் மற்றும் இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் அதிர்ச்சியாகியுள்ளனர். புகைப்படங்களை வெளியிட்டது யார் என்று விசாரணை நடைபெற்று வருகிறது.


Saturday, February 18, 2012

விருது பெற்ற மகிழ்ச்சியில் இளையதளபதி விஜய் ......


எடிசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகிய இரண்டு விருதுகளை வாங்கிய மகிழ்ச்சியில் இளையதளபதி விஜய் உள்ளார்.
சமீபத்தில் விஜய், சிறந்த நடிகருக்கான எடிஷன் விருது மற்றும் வேலாயுதம் படத்தில் சிறப்பாக நடித்ததற்கு “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்” விருது என இரண்டு விருதுகளை பெற்றார்.


இதுகுறித்து இளையதளபதி விஜய் கூறியிருப்பதாவது, இந்த வருடத்தின் தொடக்கம் எனக்கு மகிழ்ச்சிகரமாக அமைந்துள்ளது.


தொடர்ந்து வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தித் தரக்கூடிய நல்ல படங்களில் நான் நடிப்பேன் என்று நம்பிக்கை வைத்துள்ளேன்.


தற்போது எனது நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி திரைப்படத்தில் நடிக்கிறேன்.


இது ஆக்ஸன் தீப்பொறி பறக்கும் படம் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இப்படம் நிச்சயம் நிறைவேற்றும் என்று இளைய தளபதி விஜய் தெரிவித்துள்ளார்.

Friday, February 17, 2012

பில்லா 2 படப்பிடிப்பில் பெப்ஸி தொழிலாளர்கள் முற்றுகை ......


அஜீத் நடிக்கும் பில்லா 2 படப்பிடிப்பை நிறுத்தக் கோரி சினிமா தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொலிவுட்டில் சம்பள பிரச்சினை காரணமாக தயாரிப்பாளர்களுக்கும், பெப்சி தொழிலாளர் அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனால் கடந்த 25 திகதிகளுக்கு மேலாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில படப்பிடிப்பு மட்டும் வெளிமாநிலங்களில் நடைபெற்று வருகிறது.


அஜீத் நடிக்கும் பில்லா-2 படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது.


இந்நிலையில் நேற்று அங்கு சென்ற சினிமா தொழிலாளர்கள் சிலர், தமிழ் திரையுலகம் வேலை நிறுத்தத்தில் இருக்கிறது. நீங்கள் மட்டும் படப்பிடிப்பை எப்படி நடத்தலாம் என்று கூறி, படப்பிடிப்பை நடக்கவிடாமல் முற்றுகையிட்டனர்.


இது குறித்து பட தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி கூறும்போது, பில்லா 2 படத்தில் விடுபட்ட காட்சிகளை மட்டுமே படமாக்கி வருகிறோம்.
சில பெப்சி உறுப்பினர்கள் வந்து தங்கள் ஆட்சேபத்தை தெரிவித்தனர். குறிப்பிட்ட சினிமா ஸ்டுடியோவுடன் நாங்கள் மேற்கொண்ட ஒப்பந்தப்படி அங்குள்ள உபகரணங்கள் மற்றும் ஊழியர்களை பயன்படுத்திக்கொள்ள ஒப்புதல் இருக்கிறது.


சம்பள பிரச்சினையில் இருக்கும் யாரையும் இந்த பணியில் ஈடுபடுத்தவில்லை என அவர்களிடம் விளக்கினோம். பின் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தினோம்.


எந்த சங்கத்துக்கும் விரோதமாக நாங்கள் போக விரும்பவில்லை. நீண்ட நாட்களுக்கு முன்பே பில்லா2 படப்பிடிப்பு தொடங்கிவிட்டோம். அதை முடிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.


திரையுலக பிரச்சினையிலிருந்து தப்பிப்பதற்காக ஐதராபாத்தில் நாங்கள் படப்பிடிப்பு நடத்துவதாக கூறுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

Wednesday, February 15, 2012

துப்பாக்கியில் இணைந்த நடிகர் ஜெயராம்.......


துப்பாக்கி திரைப்படத்தில் விஜய்யுடன் நடிகர் ஜெயராம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
கொலிவுட்டில் நண்பன் படத்தினைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் துப்பாக்கி உருவாகி வருகிறது.


துப்பாக்கி திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார். கலைப்புலி S.தாணு தயாரித்து வருகிறார்.


துப்பாக்கி திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்றது. தற்போது துப்பாக்கியில் முக்கிய வேடத்தில் நடிக்க ஜெயராம் ஒப்பந்தமாகி இருக்கிறார்.


ஜெயராம் நடிப்பில் தமிழில் கடைசியாக பொன்னர் சங்கர் வெளிவந்தது. மலையாள திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் ஜெயராம் தமிழில் நல்ல வேடங்கள் வந்தால் மட்டுமே நடித்து வந்தார்.


இந்நிலையில் துப்பாக்கி படத்தில் ஜெயராமிற்கு விஜய்க்கு இணையான வேடம் கொடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தயாரிப்பாளர் சங்கம்- பெப்ஸி பிரச்சினை முடிந்தவுடன் நடைபெற இருக்கும் 


துப்பாக்கி படப்பிடிப்பில் ஜெயராம் கலந்து கொள்ள இருக்கிறார்.
சரோஜா, தாம் தூம் படங்களில் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஜெயராம். இப்படத்தில் அவர் வில்லனா இல்லையா என்பது மறைவான செய்தியாக அமைந்துள்ளது.

Saturday, February 11, 2012

சண்டைகாட்சிகளில் ரிஸ்க் எடுத்த அஜித்....


சக்ரி இயக்கத்தில் யுவன்சங்கர் ராஜா இசையில் அஜித், பார்வதி ஒமணக்குட்டன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் பில்லா 2.
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. மார்ச் மாதம் பாடல் வெளியீட்டு விழா நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.
பில்லா 2 படத்தினை எதிர்பார்த்ததை விட பிரம்மாண்டமாக தயாரித்து இருக்கிறார்களாம். 

ஒவ்வொரு காட்சிக்கும் பல கோடிகளை செலவு செய்து காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
அஜித் மற்றும் வில்லன்கள் மோதும் காட்சியை ஜார்ஜியாவில் உள்ள பனிமலையில் படமாக்கி இருக்கிறார் சக்ரி. 

இது வரை இந்திய சினிமாவில் அப்படி ஒரு சண்டைக்காட்சியை பார்த்து இருக்க முடியாது என்கிறது படக்குழு.

அதுபோலவே ஆங்கில படங்களில் வரும் ஹெலிகாப்டர் சண்டைக்காட்சியை போன்று பில்லா 2 படத்திலும் ஒரு சண்டைக்காட்சி இருக்கிறது. 

அந்த சண்டைக்காட்சிக்கு பல கோடிகளை செலவு செய்து இருக்கிறார்கள்.
ஹெலிகாப்டர் சண்டைக்காட்சிகளில் ரிஸ்க் இருந்தும் டூப் எல்லாம் வேண்டாம் என்று கூறி விட்டு தானே நடித்து கொடுத்து இருக்கிறார் அஐித்

மனநலம் குன்றிய மாணவர்களுடன் நாயகன் விஜய்


கதைக்களம் தரமாக அமைந்தால் இரண்டு நாயகர்களுடன் இணைந்து நடிப்பதாக நாயகன் விஜய் கூறியுள்ளார்.
கொலிவுட்டில் ஷங்கர் இயக்கிய நண்பன் திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் நாயகன் விஜய் பயணித்துவருகிறார்.


தமிழ்நாட்டில் நண்பன் திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை விஜய் தந்து கொண்டிருக்கிறார்.


சமீபத்தில் மதுரையில் நண்பன் திரையிடப்பட்டுள்ள தங்கரீகல் தியேட்டருக்கு சென்று ரசிகர்களுடன் நண்பன் வெற்றியை நாயகன் விஜய் கொண்டாடினார்.


இதையடுத்து மதுரையில் மனநலம் குன்றிய மாணவர்கள் மத்தியிலும் நாயகன் விஜய் உரையாடி, அவர்களுக்கும் இன்ப அதிர்ச்சியளித்துள்ளார்.


அப்போது நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில்,
நண்பன் திரைப்படத்தை போல இரண்டு, மூன்று கதாநாயகர்களுடன் சேர்ந்து நடிப்பீர்களா?


விஜய்: ஒரு திரைப்படத்திற்கு கதை தான் நாயகன். நாங்கள் இரண்டாம் பட்சம் தான். எனவே கதை திருப்திகரமாக இருந்தால் நடிப்பேன்.


நடிகர் சூர்யாவுடன் மீண்டும் இணைந்து நடிப்பீர்களா?
விஜய்: பிரண்ட்ஸ் திரைப்படம் போல ஒரு கதை அமைந்தால் இணைந்து நடிப்பேன்.




தற்போது நீங்கள் நடித்துக்கொண்டிருக்கும் படம்?
விஜய்: துப்பாக்கி என்று பதிலளித்தார்

அரசியல் எனக்கு தெரியாது: அஜித் ...


எனக்கு சினிமா மட்டும் தான் தெரியும், அரசியல் தெரியாது அரசியலுக்கு வர எனக்கு எந்த தகுதியும் கிடையாது என நடிகர் அஜித் அதிரடியாக கூறியுள்ளார்.
தற்போது பில்லா-2 படத்தில் மும்மரமாக இருக்கும் அஜித், எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.


இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழ்நாட்டுல் ஏற்கனவே நிறைய அரசியல்வாதிகள் இருக்கின்றனர்.


இதுல அரசியலே என்னவென்று தெரியாத நிலையில், அரசியல பத்தி முழுசா புரிஞ்சுக்காம, வெறும் சினிமா பாப்புலாரிட்டியை மட்டும் வைத்து நான் எப்படி அரசியலில் இறங்குவது.


நிச்சயம் நான் அப்படி செய்ய மாட்டேன். எனக்கு தெரிஞ்சதெல்லாம் சினிமா மட்டும் தான். தெரிஞ்ச சினிமாவை விட்டு தெரியாத அரசியலில் இறங்கி, மக்களையும் குழப்ப மாட்டேன்.


அரசியலுக்கு வரும் எந்த தகுதியும் எனக்கு சுத்தமா கிடையாது அதில் எனக்கு விருப்பமும் கிடையாது என்று கூறியுள்ளார்...

Wednesday, February 8, 2012

பிரம்மாண்டத்தின் மறுபக்கமாக பில்லா 2 அமையும்: படக்குழு .....


பில்லா 2 திரைப்படத்தை எதிர்பார்த்ததை விட பிரம்மாண்டமாக தயாரித்து இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
கொலிவுட்டில் தல அஜீத்குமார், பார்வதி ஒமணக்குட்டன் நடிக்கும் பில்லா 2 திரைப்படத்தை சக்ரி டோலட்டி இயக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இத்திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. வருகிற மார்ச் மாதம் இசை வெளியீட்டு விழா நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள்.
பில்லா 2 படத்தினை எதிர்பார்த்ததை விட பிரம்மாண்டமாக தயாரித்து இருப்பதாகவும் ஒவ்வொரு காட்சிக்கும் பல கோடிகளை செலவு செய்து காட்சிப்படுத்தியிருப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

அஜீத் மற்றும் வில்லன்கள் மோதும் காட்சியை ஜார்ஜியாவில் உள்ள பனிமலையில் இயக்குனர் படமாக்கியுள்ளார். இது வரை இந்திய சினிமாவில் அப்படி ஒரு சண்டைக்காட்சியை பார்த்து இருக்க முடியாது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளார்கள்.

அதுபோலவே ஆங்கில படங்களில் வரும் ஹெலிகொப்டர் சண்டைக்காட்சியை போன்று பில்லா 2 படத்திலும் ஒரு சண்டைக்காட்சி இருக்கிறது.

அந்த சண்டைக்காட்சிக்கு பல கோடிகளை செலவு செய்து இருக்கிறார்கள். ஹெலிகொப்டர் சண்டைக்காட்சிகளில் டூப் போடாமல் அஜீத்குமார் நடித்துக் கொடுத்திருக்கிறார்.
இதற்கு முன்பு அஜீத்குமார் நடித்து வெளிவந்த படங்களை விட அதிக பட்ஜெட்டில் பில்லா 2 வெளிவர இருக்கிறது.

Monday, February 6, 2012

அஜீத் குமாருடன் இணையும் ஆர்யா, நயன்தாரா .........



 கொலிவுட்டில் விஷ்ணுவர்த்தன் இயக்கும் புதிய திரைப்படத்தில் அஜீத்குமாருடன் ஆர்யா, நயன்தாரா இணைந்து நடிக்க உள்ளனர்.
கொலிவுட்டில் பில்லா-2 திரைப்படத்திற்கு பிறகு தல அஜித், விஸ்ணு வர்தன் இயக்கும் ஆக்ஷன் படத்தில் நடிக்கிறார்.


தமிழில் அஜித்துக்கு பில்லா திரைப்படத்தை கொடுத்த விஸ்ணு வர்த்தனால் திகதிகள் காரணமாக அடுத்து இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லாமல் போனது.


தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து படம் இயக்கிய விஸ்ணு வர்தன், இப்போது அஜித்துடன் இணைந்துள்ளார்.


இந்தப்படத்தில் அஜித்துடன் ஆர்யா, நயன்தாரா ஆகியோர் நடிக்கிறார்கள்.
நான் ஒரு படத்தில் நடிக்க எட்டு மாதங்கள் எடுத்துக்கொள்வேன். எனக்கு பொருத்தமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்க தயாராக இருக்கிறேன்.


மேலும் என் மீது அன்பும் மரியாதையும் வைத்துள்ள கொலிவுட் இளம் நாயகர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் என்று அஜித் கூறியுள்ளார்.

Sunday, February 5, 2012

SATHYAN WITH ILAYATHALAPATHY AGAINNN...


Sathyan has become a household name, thanks to the impact of his role in 'Nanban'. The hero-turned-comedian, who impressed everyone as 'sincere student' Srivathsan in the Shankar-directed Vijay starrer, is sharing the screen space with the Ilayathalapathy again!
"I play an important role in Thupaki. It is a delight to work with Vijay again. My thanks to director AR Murugadoss and the Ilayathalapathy," says the actor, who earlier played Vijay's friend 'Vettaikaran'.
"Though I am playing Vijay's friend in Thupaki once again, the role is totally different from the ones I did in the past. And I signed this film much before Nanban hit the screens," says Sathyan, who is a close relative to Sathyaraj.
"In fact, when I was shooting for Nanban, the associate producers of Thupaki watched me performing on the sets and recommended my name to Murugadoss. The director paid heed to their suggestion and roped me in," he added.

Saturday, February 4, 2012

தயாரிப்பாளர்கள் சங்க பிரச்சினைகளுக்கு பின்பு துப்பாக்கி படப்பிடிப்பு தொடங்கும் ....


துப்பாக்கி திரைப்படத்திற்கான படப்பிடிப்பு, தயாரிப்பாளர்கள் சங்க பிரச்சினைகளுக்கு பின்பு தொடங்கப்படும் என்று ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
கொலிவுட்டில் நண்பன் வெற்றிக்குப்பிறகு இளையதளபதி விஜய் துப்பாக்கி திரைப்படத்தில் நடிக்கிறார்.


துப்பாக்கி திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். காஜல் அகர்வால் விஜய்யுடன் இணைகிறார்.
துப்பாக்கி படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் பெப்ஸி தொழிலாளர்கள் சங்கத்திற்கும் இடையே பிரச்சினைகள் எழுந்தது.


இதனால் துப்பாக்கி திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் தள்ளிவைக்கப்பட்டது. இதுகுறித்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது, துப்பாக்கி திரைப்படத்தில் இளையதளபதி நன்றாக நடித்து வருகிறார்.
துப்பாக்கி திரைப்படத்திற்காக தன்னுடைய இயல்பான பாணியை விட்டும் விஜய் மாறுபட்டு நடிக்கிறார். தற்போது தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் பெப்ஸி தொழிலாளர்கள் சங்கத்திற்கும் இடையே பிரச்சினைகள் நடந்து வருவதால் துப்பாக்கி படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினைகள் முடிந்தவுடன் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.