கொலிவுட்டில் பில்லா-2 திரைப்படத்திற்கு பிறகு தல அஜித், விஸ்ணு வர்தன் இயக்கும் ஆக்ஷன் படத்தில் நடிக்கிறார்.
தமிழில் அஜித்துக்கு பில்லா திரைப்படத்தை கொடுத்த விஸ்ணு வர்த்தனால் திகதிகள் காரணமாக அடுத்து இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லாமல் போனது.
தெலுங்கில் பவன் கல்யாணை வைத்து படம் இயக்கிய விஸ்ணு வர்தன், இப்போது அஜித்துடன் இணைந்துள்ளார்.
இந்தப்படத்தில் அஜித்துடன் ஆர்யா, நயன்தாரா ஆகியோர் நடிக்கிறார்கள்.
நான் ஒரு படத்தில் நடிக்க எட்டு மாதங்கள் எடுத்துக்கொள்வேன். எனக்கு பொருத்தமான கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்க தயாராக இருக்கிறேன்.
மேலும் என் மீது அன்பும் மரியாதையும் வைத்துள்ள கொலிவுட் இளம் நாயகர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் என்று அஜித் கூறியுள்ளார். |
No comments:
Post a Comment