அஜீத் நடிக்கும் பில்லா 2 படப்பிடிப்பை நிறுத்தக் கோரி சினிமா தொழிலாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. |
கொலிவுட்டில் சம்பள பிரச்சினை காரணமாக தயாரிப்பாளர்களுக்கும், பெப்சி தொழிலாளர் அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 25 திகதிகளுக்கு மேலாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில படப்பிடிப்பு மட்டும் வெளிமாநிலங்களில் நடைபெற்று வருகிறது. அஜீத் நடிக்கும் பில்லா-2 படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று அங்கு சென்ற சினிமா தொழிலாளர்கள் சிலர், தமிழ் திரையுலகம் வேலை நிறுத்தத்தில் இருக்கிறது. நீங்கள் மட்டும் படப்பிடிப்பை எப்படி நடத்தலாம் என்று கூறி, படப்பிடிப்பை நடக்கவிடாமல் முற்றுகையிட்டனர். இது குறித்து பட தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி கூறும்போது, பில்லா 2 படத்தில் விடுபட்ட காட்சிகளை மட்டுமே படமாக்கி வருகிறோம். சில பெப்சி உறுப்பினர்கள் வந்து தங்கள் ஆட்சேபத்தை தெரிவித்தனர். குறிப்பிட்ட சினிமா ஸ்டுடியோவுடன் நாங்கள் மேற்கொண்ட ஒப்பந்தப்படி அங்குள்ள உபகரணங்கள் மற்றும் ஊழியர்களை பயன்படுத்திக்கொள்ள ஒப்புதல் இருக்கிறது. சம்பள பிரச்சினையில் இருக்கும் யாரையும் இந்த பணியில் ஈடுபடுத்தவில்லை என அவர்களிடம் விளக்கினோம். பின் தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தினோம். எந்த சங்கத்துக்கும் விரோதமாக நாங்கள் போக விரும்பவில்லை. நீண்ட நாட்களுக்கு முன்பே பில்லா2 படப்பிடிப்பு தொடங்கிவிட்டோம். அதை முடிக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். திரையுலக பிரச்சினையிலிருந்து தப்பிப்பதற்காக ஐதராபாத்தில் நாங்கள் படப்பிடிப்பு நடத்துவதாக கூறுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார். |
For Thala Thalapathy Fans
Friday, February 17, 2012
பில்லா 2 படப்பிடிப்பில் பெப்ஸி தொழிலாளர்கள் முற்றுகை ......
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment