For Thala Thalapathy Fans



Sunday, July 22, 2012

இன்று வெளியானது முகமூடி இசை ...


மிஷ்கினின் கனவுப்படமான முகமூடியின் இசைக்குறுந்தகடை இளைய தளபதி விஜய் வெளியிட்டார்.
தமிழ் திரையுலகில் முதன்முறையாக உருவாகும் சூப்பர் ஹீரோவின் கதையே முகமூடி.
இப்படத்தில் ஜீவா சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார். ஜீவாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.


இவர்களுடன் நரேன், நாசர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு கிரிஷ்ணகுமார் இசையமைத்துள்ளார். ஏற்கனவே முகமூடியின் டிரைலர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.


இந்நிலையில் இன்று முகமூடியின் இசை வெளியிடப்பட்டது. இவ்விழாவில் இளைய தளபதி விஜய், இயக்குனர் மிஷ்கின், ஜீவா, நரேன், பூஜா ஹெக்டே ஆகியோர் கலந்து கொண்டனர்.
இசைக்குறுந்தகடை இளைய தளபதி விஜய் வெளியிட கன்னட நடிகர் புனித்குமார் பெற்றுக்கொண்டார்.


தமிழ் சினிமா விழாவில் நடிகர் புனித் குமார் கலந்து கொள்வது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

No comments:

Post a Comment