For Thala Thalapathy Fans



Sunday, July 1, 2012

இளமையாக மாறுகிறார் அஜித் ....

விஷ்ணுவர்தன் இயக்கி வரும் புதிய படத்திற்காக தினமும் 5 மணி நேரம் உடற்பயிற்சி செய்து, தனது உடல் எடையை குறைத்து  ரசிகர்களுக்கு முன்பு இளைமையாக காட்சியளிக்கப்போகிறார் தல அஜித் குமார்.
பில்லா-2 படத்திற்கு பின்பு, அஜித் விஷ்ணுவர்தன் இயக்கி வருகிற புதிய படத்தில் நடித்து வருகின்றார்.


இப்படத்தில் அஜித்துடன் ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி ஆகியோர் இணைகின்றனர். இப்படத்தில் அஜித் இளமையாக தோன்ற வேண்டுமென்பதற்காக உடல் எடையை குறைக்க வேண்டும்.
நரைமுடியை மறைக்க வேண்டும். இதற்கான முயற்சியில் அஜித் தற்போது இறங்கியுள்ளார்.


கடந்த ஒருவாரமாக அஜித், தினமும் 5 மணி நேரம் உடற்பயிற்சி செய்து வருகின்றார்.


மங்காத்தா படத்தில் பார்த்ததைப் போல இப்புதிய படத்தில் அஜித்தை ரசிகர்கள் பார்க்க இயலாது என்றும் அவரது உடல் அமைப்பு நம்பமுடியாத அளவுக்கு மாறியிருக்கிறது எனவும் இயக்குனர் விஷ்ணுவர்தன் தெரிவித்துள்ளார்.


இப்படம் பாலிவுட்டில் வெளியான ரேஸ் படத்தின் ரீமேக் என்ற தகவலும் கொலிவுட்டில் நிலவி வருகின்றது.

No comments:

Post a Comment