தனியார் சாட்டிலைட் தொலைகாட்சி ஒன்றை தொடங்குவது; இளையதளபதி விஜய் மற்றும் அவரது அப்பாவின் நீண்டநாள் திட்டம்! இதற்கான முதல்கட்ட பணிகள் ஒரு சிறு அலுவலகத்துடன் ஏற்கனவே தொடங்கிவிட்டன. சேனலின் பெயர் அதை ஒளிபரப்ப இருக்கும் சாட்டிலைட் என; எல்லா விஷயங்களையும் விஜயின் மனைவி சங்கீதா கவனித்துவருகிறார்.தொழில்நுட்பம் தொடர்பான பணிகளை கவனிக்க முன்னணி சேனலில் பணிபுரிந்த ஒருவரிடம் கன்சல்டேஷன் பெற்றிருக்கிறார்களாம்.
தற்போது சேனலுக்கு எவ்வளவு தளவாடங்கள் வாங்குவது எவ்வளவு மேன் பவர் என்பதை இறுதிசெய்யும் வேலையில் இருக்கிறாராம் சங்கீதா! இந்த தொடக்கக் கட்டப் பணிகள் முடிந்தவுடன் சேனலின் லோகோவுடன் வரும் பொங்கல் அன்று அறிவிக்கப்படும் என்கிறார்கள் விஜய் வட்டாரத்தில். இந்த சேனலின் நிர்வாக தலைமை பொறுப்பை பிரபல பத்திரிக்கையாளர் ஏற்கவிருக்கிறாராம்.
இதற்கிடையில் விஜய் வேறொரு சேனலுக்கு கோடீஸ்வரன் டைப் குயிஸ் நிகழ்ச்சியை நடத்தித் தர ஒப்புக்கொண்டிருப்பது பற்றி கேட்டால், அது பற்றி விஜய் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்கிறார்கள் விஜய்க்கு நெருக்கமானவர்கள்!
No comments:
Post a Comment