For Thala Thalapathy Fans



Friday, November 18, 2011

விஜய்க்கு ஜோடியாகும் காஜல்!!!!


விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் இணையும் படத்திற்கு ஏஞ்சலா ஜான்சனை நாயகி ஆக்கலாம் என்று முடிவு செய்து இருந்தார்கள். விஜய் – ஏஞ்சலா ஜான்சனை வைத்து ஒரு போட்டோ ஷுட் நடத்தினார் சந்தோஷ் சிவன். இந்நிலையில் இப்படத்தில் இருந்து தேதிகள் பிரச்னை காரணமாக விலகி விட்டாராம் ஏஞ்சலா ஜான்சன்.
இதனால் வேறு ஒரு நாயகியை தேடி வந்தார்கள். இந்தியில் முன்னனி நாயகியாக இருக்கும் சோனம் கபூரை நாயகி ஆக்கலாம் என்று முடிவு செய்து அவரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வலம் வந்தன.
இந்நிலையில் விஜய் படத்தின் நாயகியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். டிசம்பர் 1ம் தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.
தற்போது தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வருகிறவர் காஜல். தமிழில் சூர்யாவிற்கு ஜோடியாக மாற்றான், தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆருடன் ஒரு படம் மற்றும் ராம் சரண் தேஜா உடன் ஒரு படம் என நடித்து வருபவர் விஜய் படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.
‘மாலை நேர மழைத்துளி’ என பெயரிடப்பட்டு இருக்கும் இப்படத்தினை இயக்க இருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருக்கிறார்.

No comments:

Post a Comment