For Thala Thalapathy Fans



Saturday, November 19, 2011

நண்பனோடு மோதவருகின்றது வேட்டை !!!!!




ஆர்யா, மாதவன், சமீரா ரெட்டி, அமலாபால் நடித்து வரும் படம் ‘வேட்டை’. லிங்குசாமி இயக்க யுவன்சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மூலம் லிங்குசாமியே தயாரிக்க யு.டிவி நிறுவனம் இப்படத்தினை வெளியிட இருக்கிறது. கிறிஸ்துமஸ் தின வெளியீடு என முடிவு செய்யப்பட்டு வேலைகளை துரிதப்படுத்தி வந்தார்கள்.
இன்னும் 2 பாடல்களை படமாக்க வேண்டுமாம். ஒரு பாடலுக்காக வரும் 20ம் தேதி ஆர்யா, அமலாபால் இருவரும் துபாய் செல்ல இருக்கிறார்கள்.
மற்றொரு பாடலுக்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக 60 லட்ச ரூபாய்க்கு செட் அமைத்து இருக்கிறார்கள். இவ்விரண்டு பாடல்கள் படமாக்கப்பட்டதும், அதனையெடுத்து இதர பணிகள் இருப்பதால் படத்தினை 2012 பொங்கல் அன்று வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.
இப்படத்தின் இசையை டிசம்பர் 2ம் வாரத்தில் வெளியிட இருக்கிறார்கள். பொங்கல் 2012 அன்று விஜய் நடிக்கும் ‘நண்பன்’ படத்தோடு போட்டியிட இருக்கிறது ‘வேட்டை’.

No comments:

Post a Comment