அஜீத் நடித்து வரும் பில்லா-2 படத்தில் குத்தாட்டம் போடுகிறார் மீனாட்சி தீக்த். பில்லா -2 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த ஜுலை மாதம் தொடங்கியது.
இப்படத்தை உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்குகிறார். பார்வதி ஓமனக்குட்டன் நாயகியாக நடிக்கிறார்.
இப்படத்தில் தெலுங்கு திரைப்பட உலகில் ‘தூக்குடு’ படத்தின் மூலம் பிரபலமான மீனாக்சி தீக்சித் அஜித்துடன் சேர்ந்து ஒரு குத்தாட்டம் ஆடியுள்ளார். பில்லா படத்தில் யுவன் சங்கர் இசையில் நமீதா ஆடிய ‘ஏதாவது செய்’ என்ற குத்துப்பாடல் மெகா ஹிட்டானது.
அதேபோல் பில்லா 2 விலும் மீனாக்சி தீட்சித் ஆடிய குத்தாட்டம் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தை பிர்லா குழுமத்தின் இன் எண்டர்டெயின்மெயின்டும், சுரேஷ் பாலாஜியும் இணைந்து தயாரிக்கின்றனர்.
No comments:
Post a Comment