டைரக்டர் விஷ்ணுவர்த்தனும் அஜீத்தும் நல்ல நண்பர்கள். அஜீத்தின் நெளிவு சுளிவு அறிந்து படப்பிடிப்பை நடத்துகிற இயக்குனர் என்பதால், பெரும்பாலும் அவரை பக்கத்தில் வைத்துக் கொள்ள நினைப்பார் இவரும். இந்த நெருக்கத்தின் காரணமாகதான் பில்லா 2 படத்தையும் அவரையே இயக்க சொன்னார் அஜீத். ஆனால் முன்பே கமிட் செய்திருந்த பவன் கல்யாண் படத்தை இயக்குவதற்காக ஆந்திராவுக்கு செல்லவிருப்பதன் அவசியத்தை அதே நெளிவு சுளிவுகளோடு விளக்கினாராம் விஷ்ணு. அப்புறம் அந்த படத்தை இயக்கும் பொறுப்பு சக்ரி வசம் போனது.
இப்போது மீண்டும் விஷ்ணுவோடு இணையவிருக்கிறார் அஜீத். இந்த நட்பின் அடர்த்தியை நாலு பேர் நாலு விதமாக பேசத்தானே செய்வார்கள்? அப்படி கிளம்பியதுதான் இந்த வதந்தியும்.
விஷ்ணுவர்த்தன் இயக்கிக் கொண்டிருக்கும் பவன் கல்யாண் படத்தை தமிழிலும் வெளியிடப் போகிறாராம் அவர். இதில் பவனுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுக்கப் போகிறார் அஜீத். இதுதான் கிளப்பப்பட்ட வதந்தி.
அப்படியெல்லாம் ஒரு ஐடியாவே இல்லை என்று மறுத்திருக்கிறார் அஜீத். அதானே பார்த்தோம்…

No comments:
Post a Comment