For Thala Thalapathy Fans



Wednesday, November 2, 2011

விஜய்யுடன் ஒரே நாளில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிடுச்சி! – ஹன்சிகா!!!!!!!!!!!!


முதல் முறை வெற்றியை ருசித்துள்ளார் ஹன்சிகா மோத்வானி, வேலாயுதம் படம் மூலம்!
ஹன்ஸிகா ஏதோ இப்போதுதான் ப்ரஷ்ஷாக பீல்டுக்கு வந்தது போலத் தெரிந்தாலும், உண்மையில் அவர் 5 ஆண்டுகள் ‘பழைய’ நடிகை!
தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், கன்னடத்தில் புனித் ராஜ்குமார், இந்தியில் ஹிமேஷ் ரேஷம்மியா என ஒரு பெரிய ரவுண்ட் அடித்து எதிலும் ஜெயிக்க முடியாமல், தமிழுக்கு வந்தார். இவரது தள தள தோற்றத்தில் தோல்விகளை மறந்து போன தமிழ் சினிமாக்காரர்கள், உடனே வாய்ப்புகளை தந்தனர்.
முதல் படம் தனுஷுடன், அடுத்த படம் ஜெயம் ரவியுடன். இரண்டுமே தோல்விகள்தான். அதைத் தொடர்ந்து வந்ததுதான் வேலாயுதம்.
இதிலும் அவருக்கு பெரிய வேடம் என்று சொல்ல முடியாது. முக்கிய வேடத்தை ஜெனிலியா செய்தாலும், ரசிகர்களை தூண்டில் போட்டு இழுக்கும் கவர்ச்சி நாயகியாக வந்தார் ஹன்சிகா. இந்த கவர்ச்சி ஒளிவெள்ளத்தில் ஜெனிலியா மங்கிப் போனார்.
இப்போது திரும்பிய பக்கமெல்லாம் ஹன்ஸிகா புராணம்தான். அம்மணியின் தாராளம், தயாரிப்பாளர்களிடம் அனுசரணையாகப் போவது, சம்பளத்தில் அட்ஜஸ்ட்மெண்ட் என நிறைய புகழ்பாடிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த வெற்றிப்படம் வந்த பிறகு இது தொடருமா என்பது வேறு விஷயம்.
வேலாயுதம் தந்த சந்தோஷத்தில் மிதக்கும் ஹன்ஸிகா, இன்னும் அந்தப் படத்தைப் பார்க்கவே இல்லையாம்.
ஏன்?
“நான் என் படத்தை பெரிய திரையில் பார்க்கவே மாட்டேன். இதுவரை நான் நடித்த எந்தப் படத்தையும் பார்த்ததில்லை. இனிமேலும் பார்க்க மாட்ட்ன். வேலாயுதம் படத்தையும் பார்ப்பதாக இல்லை. நான் மிகப் பெரிய விமர்சகர். என்னைப் பார்த்து நானே கோபப்படும்படி ஆகிவிட்டால்… அதான்.
ஆனால் என் அம்மா, நண்பர்கள் பார்த்துவிட்டு ஓஹோ என்று பாராட்டினார்கள்.
இந்தப்படத்தின் விமர்சனங்களைப் படித்துவருகிறேன் (ஜெயிச்சாதான் படிப்பீக போல!). என்னை இந்த அளவு திறமையாக பயன்படுத்திய ஜெயம் ராஜா, விஜய்க்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.
ஆக்சுவலா, முதல்நாள் ஸ்பாட்டுக்குப் போகும்வரை எனக்கு ராஜா, விஜய் இருவரையுமே தெரியாது. ஆனால் ஒரே நாள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆயிடுச்சி எனக்கும் விஜய்க்கும். நாங்க நல்ல பிரண்ட்ஸாயிட்டோம்,” என்கிறார் ஹன்ஸிகா.
அடுத்து உதயநிதியுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி, சிம்புவுடன் வேட்டை மன்னன் படங்களில் நடித்து வருகிறார் ஹன்ஸிகா. இவை இரண்டுமே நிச்சயம் வெற்றிப் படங்கள் என்கிறார் உறுதியாக.
ஓ… இப்பவே கோடீஸ்வர நடிகைகள் லிஸ்டுக்கு வந்தாச்சா

No comments:

Post a Comment