For Thala Thalapathy Fans



Saturday, October 1, 2011

மங்காத்தா பார்க்கணும்......வெங்கட் பிரபுவிற்கு சல்மான் கான் போன் !!!!


வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்ற வழக்கத்தை அடித்து நொறுக்குகிறார்கள் நம்ம ஊர் இயக்குனர்களும், அவர்கள் இயக்கிய படங்களும். சல்மான் கான், ஷாரூக்கான் என்று கான்களே கவனம் வைக்கிற அளவுக்கு சிறப்பு ’பொருளாதார’ மண்டலமாகிவிட்டது கோடம்பாக்கம்.
ஒரு சமீபத்திய ஆச்சர்யம் இது. மங்காத்தா படத்தின் திருட்டு விசிடியை பார்த்தே இம்ரஸ் ஆகிவிட்டாராம் சல்மான். இதன் நல்ல பிரிண்ட்டை இன்னொரு முறை பார்க்க வேண்டும் என்ற ஆவல் கிளம்பிவிட்டது அவருக்கு. சென்னையிலிருக்கும் வெங்கட்பிரபுவுக்கே போன் அடித்துவிட்டாராம். உங்க மங்காத்தா பார்த்தேன். பிரமாதமா இருந்திச்சு. ஆனால் பிரிண்ட் சரியில்லாத ஒரு டி.வி.டியில் பார்க்கும்படி ஆகிருச்சு. நல்ல பிரிண்ட் ஒன்று அனுப்பி வைக்க முடியுமா என்றாராம்.
அவரே லைனில் வந்தபிறகு ஆடிப்போனார் வெங்கட். உடனடியாக ஒரு பிளைட்டில் நல்ல குவாலிடியான டிஜிட்டல் பிரிண்ட்டையே அனுப்பி வைத்தாராம். வெங்கட்டிடமே இப்படி பாராட்டிய சல்மான் அஜீத்திடம் பேசாமலா இருந்திருப்பார்?

No comments:

Post a Comment