For Thala Thalapathy Fans



Saturday, October 1, 2011

வெங்கட் பிரபுக்கு பதில் லாரன்ஸ் :"தல"யின் திடீர் முடிவு


தன் வீட்டு ஹோம் தியேட்டரில் கடந்த வாரம்தான் ‘காஞ்சனா’ படம் பார்த்தாராம் அஜித். அசந்தே போய்விட்டார். லாரன்சை பார்க்கணும், பாராட்டணும். கொஞ்சம் வரச் சொல்றீங்களா? என்றாராம் உதவியாளர்களிடம். தேடிப்போன சாரல் மேலே வந்து விழுந்த கதையாக சிலிர்த்துப் போனராம் லாரன்ஸ். விழுந்தடித்துக் கொண்டு ஓடியிருக்கிறார் அஜித்தை சந்திக்க. இருவரும் மணிக்கணக்காக பேசிக் கொண்டிருந்தார்களாம்.
இந்த படத்தின் ஸ்கீரின் ப்ளே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்று கூறிய அஜித், அப்படியே எனக்கும் ஒரு கதை சொல்லுங்க. சேர்ந்து பண்ணலாம் என்று கூறினாராம். அதற்கும் காரணம் இருந்தது. விஷ்ணுவர்தன் படத்திற்கு பிறகு வெங்கட்பிரபு இயக்கும் படத்திற்கு கால்ஷீட் தருகிற எண்ணத்தில் இருந்தாரல்லவா? சமீபத்திய சோனா-சரண் கோளாறுகளால் வெங்கட்பிரபுவுக்கு படம் பண்ணுகிற திட்டத்தை கைவிட்டு விட்டாராம்.
அவருக்கு பதிலாகதான் லாரன்சுடன் படம் பண்ணுகிற ஆசை வந்திருக்கிறது அஜித்திற்கு. இந்த சந்திப்பில் ஏராளமாக பேசிய பின் அஜித் கோவா சென்று விட்டார். லாரன்ஸ் ஐதராபாத் சென்று விட்டார். ஆனாலும் போனில் தொடர்கிறதாம் கதைப்பேச்சு!
சே.. அடிச்சாலும் அதிர்ஷ்டம் இப்டிலப்பா அடிக்கணும்……..

No comments:

Post a Comment