For Thala Thalapathy Fans



Thursday, July 19, 2012

அஜித் பாராட்டிய “நான் ஈ” ....//////


கொலிவுட்டில் நானி, சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடைபோட்டுக் கொண்டிருக்கும் “நான் ஈ” படத்தை 'தல' அஜித் பாராட்டியுள்ளார்.
தற்போதெல்லாம் 'நான் ஈ' படத்தின் இயக்குனர் ராஜமெளலியை போனில் யாராவது அழைத்தால், பல நேரங்களில் அவரது எண் பிஸியாக இருக்கிறது.


காரணம் ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகமும் படத்தினை பார்த்து விட்டு அவரது எண்ணை தொடர்பு கொண்டு அழைத்து புகழ்ந்து தள்ளுகிறார்களாம்.


பிரபாஸ், மகேஷ், ரவிதேஜா, வெங்கடேஷ், நாகார்ஜுனா, சித்தார்த், ராணா, விக்ரம், சூர்யா, கார்த்தி, தனுஷ், ரஜினி, இயக்குனர்கள் ராம் கோபால் வர்மா, ஷங்கர், லிங்குசாமி என்று அனைத்து தரப்பினரும் படம் பார்த்துவிட்டு ராஜமெளலியை தொடர்பு கொண்டு பாராட்டி இருக்கிறார்கள்.
தற்போது அந்த வரிசையில் இன்னொரு நட்சத்திரமும் சேர்ந்திருக்கிறார். அவர் தான் “தல” அஜித். 'நான் ஈ' படத்தினை பார்த்த அஜீத், இயக்குனர் ராஜமெளலியை தொடர்பு கொண்டு புகழ்ந்து தள்ளி விட்டாராம்.


அடுத்து இவர் நேரடி தமிழ் படம் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment