இப்படம் 1979ம் வருடம் திரைக்கு வந்தது. பாடல்கள், கலகலப்பு, காதல் என அனைத்திலும் இப்படம் சூப்பர் ஹிட்டானது.
ஜெயப்பிரதா நாயகியாக நடிக்க எம்.எஸ். விஸ்வநாதன் நினைத்தாலே இனிக்கும் படத்திற்கு இசையமைத்திருப்பார்.
இந்நிலையில் தற்போது இப்படத்தை ரீமேக் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. இதில் விஜய், அஜித் இணைந்து நடிக்கவுள்ளார்கள் என்றும் செல்வா இயக்கவுள்ளார் எனவும் ஊடகங்கள் வெளியிட்டன.
ஆனால் இயக்குனர் செல்வா இந்த செய்தியை மறுத்துள்ளார். அவர் கூறியதாவது, நினைத்தாலே இனிக்கும் ரீமேக் குறித்து வெளியான தகவல்கள் பொய்யானது.
இப்படத்தை ரீமேக்காக இயக்க நினைத்திருந்தால் தானே இதுகுறித்து விஜய், அஜித்திடம் பேசமுடியும். ஆனால் அவ்வாறு நினைக்கவில்லை என மறுத்துள்ளார்.
இயக்குனர் செல்வா, அஜித்குமாரை திரையுலகில் நாயகனாக அமராவதி படத்தின் மூலம் அறிமுகம் செய்தவர். இதையடுத்து நான் அவனில்லை படத்தை ரீமேக் செய்து வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. |
No comments:
Post a Comment