For Thala Thalapathy Fans



Friday, May 18, 2012

ஜுன் மாதத்தில் திரைக்கு வரும் தல அஜித்தின் பில்லா-2 ...


திரை ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பை தூண்டிவிட்டுள்ள அஜித் குமாரின் பில்லா-2, வரும் ஜுன் 8ம் திகதி திரைக்கு வருகின்றது.
சக்ரி டோலெட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள பில்லா-2, மொத்தம் ரூ 40 கோடிக்கு விற்பனையாகியுள்ளது.


இன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சுனில் கேட்டர்பால் தயாரித்துள்ள பில்லா 2 -ன் விநியோக உரிமையை ஒஸ்கர் ரவிச்சந்திரன் பெற்றுள்ளார்.


அஜித் குமாரின் பிறந்த நாள் கொண்டாட்டமாக மே 1ம் திகதி பில்லா-2 படத்தின் இசையை படக்குழுவினர் வெளியிட்டார்கள். இதில் வரும் “கேங் கேங் கேங் ஸ்டார்” எனத் தொடங்கும் தீம் பாடல் ரசிகர்கள் தங்கள் நாவில் அடிக்கடி முணுமுணுக்கும் பாடலாக மாறிவிட்டது.


இந்நிலையில் வரும் ஜூன் 8ம் திகதி படம் வெளியாகும் என தங்களுக்கு தகவல் சொல்லப்பட்டுள்ளதாக பில்லா-2 விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அதற்கு முன்பு, படத்தின் இரண்டாவது ட்ரைலர் வெளியாகும் என்றும், அடுத்தவாரம் படத்தின் சென்சார் முடிந்ததும் வெளியீட்டுத் திதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment