எனது ஒரிஜினல் குணம் கொண்ட வேடத்தில் விஜய்யுடன் நடிக்கிறேன்’ என்றார் காஜல் அகர்வால்.
விஜய் நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘துப்பாக்கி’ படத்தில் காஜல் அகர்வால் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: விஜய், முருகதாஸுடன் பணியாற்ற ஆசை. அதற்கான வாய்ப்பு இப்படத்தில் கிடைத்துள்ளது.
இது கமர்ஷியல் படம். எனது ஒரிஜினல் கேரக்டர் எப்படி இருக்குமோ அதேபோன்று வேடமும் அமைந்திருக்கிறது. முருகதாஸ் படங்களில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்கும்.
அதுபோல் இதிலும் அமைந்துள்ளது. மும்பையில் இதன் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
No comments:
Post a Comment