For Thala Thalapathy Fans



Monday, December 5, 2011

‘நண்பன்’ இசைக்காக வரும் அமீர்கான்!!!!!!


விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடிப்பில் வரும் பொங்கல் அன்று வெளியாக இருக்கும் படம் ‘நண்பன்’. இந்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற ’3 இடியட்ஸ்’ படத்தின் ரீமேக் ‘நண்பன்’. ஷங்கர் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருக்கிறார். இலியானா நாயகியாக நடிக்க ஜெமினி நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை டிசம்பர் 14 ஆம் திகதி நேரு அரங்கில் பிரம்மாண்டமாக நடத்த இருக்கிறார்கள்.
3 இடியட்ஸ் படத்தின் நாயகன் அமீர்கான், இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்ளக்கூடும் என்கிறார்கள். டிசம்பர் 14 ஆம் திகதி இசை வெளியானவுடன் இப்படத்தினை தொடர்ந்து விளம்பரப்படுத்தி ஜனவரி 14 இல் உலகம் முழுவதும் வெளியிட இருக்கிறார்கள்.

No comments:

Post a Comment