For Thala Thalapathy Fans



Friday, December 9, 2011

மீண்டும் இணையும் விஜய் - ஜி.வி பிரகாஷ் கூட்டணி!!!!!

இளைய தளபதி விஜயை வைத்து இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கும் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க இருக்கிறார்.
இந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இயக்குனர் விஜய், நடிகர் விக்ரமை வைத்து இயக்கும் படத்திற்கு பிறகு இந்த படத்தை இயக்குவார் எனத் தெரிகிறது.
கடந்த 2007ம் ஆண்டில் வெளியான அஜித்தின் கிரீடம் படத்தின் மூலம் இயக்குனர் விஜய்யும், இசை இளவல் ஜி.வி.பிரகாஷ் குமாரும் கூட்டணி அமைத்தார்கள்.
அந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு மதராசபட்டினம் படத்திலும், சீயான் விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் படத்தில் இணைந்து அசத்தினர்.
இந்த வெற்றிக் கூட்டணி நான்காவது முறையாக விஜய் படத்தில் இணைந்திருக்கிறது. இப்படத்தை சந்திர பிரகாஷ் ஜெயின் தயாரிக்க இருக்கிறார்.

No comments:

Post a Comment