பவன் கல்யான் நடிப்பில் தெலுங்கில் வெளிவர இருக்கும் படம் பாஞ்சா. இப்படத்தை விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார்.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். இப்படத்தின் பாடல்களுக்கு தெலுங்கில் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
அஜீத் நடிக்கும் அடுத்த படத்தினை இயக்க இருக்கிறார் விஷ்ணுவர்தன். ஏ.எம்.ரத்னம் தயாரிக்க இருக்கிறார். இந்த நிலையில் பாஞ்சா படத்தின் தமிழ் ரீமேக்கை தான் அஜீத்தை வைத்து விஷ்ணுவர்த்தன் இயக்க இருக்கிறார் என்று செய்திகள் வலம் வந்தன.
இந்நிலையில் பாஞ்சா படத்தின் தயாரிப்பாளர்கள் அப்படத்தினை தமிழில் டப்பிங் செய்து வெளியிட இருக்கிறார்கள். தமிழ் டப்பிங் படத்திற்கு குறி என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
வருகிற டிசம்பர் 9 ஆம் திகதி பாஞ்சா வெளியாக இருக்கிறது. தற்போது தான் தமிழ் டப்பிங் பணிகள் தொடங்கி இருக்கிறது. சனவரியில் தமிழ் டப்பிங்கான குறியை படக்குழு வெளியிட இருக்கிறார்கள்.
இந்த செய்தியின் மூலம் பாஞ்சா படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜீத் நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது. |
No comments:
Post a Comment