For Thala Thalapathy Fans



Sunday, November 27, 2011

அஜித்தின் “மங்காத்தா” படம்: 100-வது நாள் விழா...????


அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் நடித்து வெளியாகிய படம் “மங்காத்தா”. அஜித்தின் 50-வது படமான இப்படத்தை இயக்கியவர் வெங்கட் பிரபு. அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். இவர்களுடன் அர்ஜுன், ஆண்ட்ரியா, உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் 31 ஆகஸ்ட் 2011 அன்று வெளியானது.
வெற்றி படமாக ஓடிகொண்டிருக்கும் “மங்காத்தா” படத்தின் 100-வது நாள் விழா கொண்டாடும் தருணம் நெருங்கி கொண்டிருக்கிறது.
இதை பற்றி இந்த படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி-யிடம் கேட்டதற்கு, அவர் கூறியதாவது:
‘மங்காத்தா’ படத்தின் வெற்றி, எங்களை மிக்க மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தை வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்துகொள்கிறேன். அஜித் பொது விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்த்து வருவது அனைவரும் தெரிந்த ஒன்று. இதனால் “மங்காத்தா” படத்தின் 100-வது நாள் விழாவில் கலந்து கொள்வாரா? என்பது சந்தேகமே. படத்தின் கதாநாயகன் கலந்துக் கொள்ளாமல், இப்படியொரு விழா நடத்தினாலும் நன்றாக இருக்காது. மேலும்,தற்போது மங்காத்தா வெற்றிக்கு பிறகு அஜித் “பில்லா 2″ படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். “மங்காத்தா” படத்தின் 100-வது நாள் வெற்றி விழா கொண்டாடும் எண்ணம் இல்லை.

No comments:

Post a Comment