மலையாளத்தில் வெளியாகி பாராட்டுக்களைப் பெற்றுள்ள உருமி படத்தின் தமிழ் வடிவ இசையை நாளை வெளியிடுகிறார் நடிகர் விஜய்.
பிருத்விராஜ் பிரபு தேவா, ஆர்யா, ஜெனிலியா, வித்யா பாலன் நடிக்கும் படம் உருமி. மலையாளத்தில் வெளியாகியுள்ள இந்தப் படத்தின் தமிழ் வடிவம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்தப் படம் குறித்து ஜெனிலியா கூறுகையில், “நான் நடித்த படங்களில் மிக வித்தியாசமானது, புதிய அனுபவத்தைத் தந்தது உருமி. சரித்திரக் கதையில் நடிப்பது சாதாரணமானதல்ல என்பதை இந்தப் படத்தில் புரிந்து கொண்டேன். அற்புதமாக வந்துள்ளது,” என்றார்.
சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள இந்தப் படம், மலையாளத்தில் விமர்சகர்கள் பாராட்டைப் பெற்றுள்ளது. பல்வேறு படவிழாக்களிலும் பங்கேற்று வருகிறது. தீபக் தேவ் இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார்.
உருமி தமிழ் படத்தின் பாடல்கள் நாளை சத்யம் திரையரங்கில் வெளியிடப்படுகிறது. நடிகர் விஜய் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பாடல்களை வெளியிடுகிறார்.
பதினைந்தாம் நூற்றாண்டில் நடக்கும் கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது உருமி.
No comments:
Post a Comment