For Thala Thalapathy Fans



Monday, November 21, 2011

விஜய்க்கு ஜோடியாகி அனுஷ்காவுக்கு ஷாக் கொடுத்த காஜல்! !!!!

விஜய்யின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாகிவிடலாம் என்று எண்ணியிருந்த அனுஷ்காவுக்கு பெரிய ஷாக் கொடுத்திருக்கிறார் நடிகை காஜல் அகர்வால். வேலாயுதம், நண்பன் படத்தை தொடர்ந்து அடுத்து, ஏ,ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படம் மாலை நேர மழைத்துளி. இந்த படத்தில் ஏஞ்சலா ஜான்சன் என்ற மாடல் அழகிதான் நாயகியாக நடிப்பதாக இருந்தது. ஆனால் போட்டோ செஷன் நடத்திய முருகதாஸ், அவர் இந்த கதைக்கு பொருந்த மாட்டார் என்று நீக்கிவிட்டு, வேறு நடிகை தேடி வந்தார். இதையறிந்த அனுஷ்கா ஏற்கனவே தான் விஜய்யுடன் வேட்டைக்காரன் படத்தில் நடித்திருப்பதால் தனக்கு சான் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு அப்ளிகேசன் போட்டு வைத்திருந்தார்.

ஆனால் யாருமே எதிர்பாராதவிதமாக திடுதிப்பென்று காஜல் அகர்வாலை அப்படத்திற்கு கமிட் பண்ணி விட்டனர். இதனால் பலத்த அதிர்ச்சி அடைந்தார் அனுஷ்கா. இந்த செய்தியை உறுதிப்படுத்த அவர் விஜய் வட்டாரத்தை தொடர்பு கொண்டபோது, காஜலுக்கு  அட்வான்சே கைமாறி விட்டது  தெரியவந்திருக்கிறது. இதனால் தெலுங்கில் தனக்கு போட்டி நடிகையாக வந்த காஜல், இப்போது தமிழுக்கும் வந்து விட்டாரே என்ற கொதிப்பில் இருக்கிறார் அனுஷ்கா.

No comments:

Post a Comment