நண்பன் படத்திற்காக ரஜினி, கமலை மையமாக வைத்த காட்சிகள் இடம்பெறுவதாக படக்குழு செய்திகள் தெரிவித்துள்ளன. |
இயக்குனர் ஷங்கர் இயக்கும் நண்பன் படத்தில் இளையதளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் இளைய தளபதி விஜய் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நண்பன் படத்தில் வரும் ஒரு பாடல் காட்சியில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகர்களான ரஜினி காந்த்,கமல் ஹாசன் இருவருக்கும் புகழ் மரியாதை சூட்டுகிற காட்சி இருப்பதாக பட உலகில் பரபரப்பான பேச்சு இருந்தது. நாயகி இலியானாவுடன் நாயகன் விஜய் எந்திரன் ரஜினி, இந்தியன் கமல் இருவரையும் நினைவு படுத்துகிற மாதிரியான காட்சியை நண்பனில் இயக்குனர் ஷங்கர் வைத்திருப்பதாக பட உலகில் பேசப்பட்டது. இதையெல்லாம் கேள்விப்பட்ட இயக்குனர் ஷங்கர் சிரித்தாராம். நண்பன் படத்தின் பாடல் காட்சியில் விஜய்-இலியானா ஜோடி நான்கு வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஏற்கனவே இயக்குனர் ஷங்கர் இயக்கிய படங்களில் உள்ள கதாபாத்திரங்களில் நண்பன் பட ஜோடி தோன்றவில்லை. விஜய்-இலியானா இருவரும் பாடலுக்கு பொருத்தமான வகையில் நடித்துள்ளார்கள் என்கிறது பட வட்டாரம். |
For Thala Thalapathy Fans
Sunday, November 13, 2011
நான்கு வித்தியாசமான கதாபாத்திரங்களில் விஜய்-இலியானா ஜோடி!!!!!!!!!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment