For Thala Thalapathy Fans



Friday, November 11, 2011

அஜித் வேண்டுகோளை ஏற்று தலைப்பை மாற்றினார் தமிழ்படம் இயக்குனர்!!!!!!!!!!


அறிமுக இயக்குனர் ஒருவரின் முதல் படம் வெற்றி பெற்றால் அந்த இயக்குநரின் அடுத்தப் படத்தை தயாரிக்க, நீ, நான் என்று தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுகொண்டு அட்வான்ஸ் கொடுப்பார்கள். ஆனால் தமிழ்படங்களை துணிச்சலாக நக்கலடித்த அமுதனின் விஷயத்தில் அது எடுபடவில்லை.
மாபெரும் வெற்றிப் படத்தை கொடுத்தப் பிறகும் பெரிய இடைவெளிக்குப் பிறகு தனது அடுத்தப் படத்தை ‘தலவலி’ என்ற தலைப்புடன் தொடங்க தயாராகிவிட்டதாக மீடியா நண்பர்களிடம் அறித்தார்.
இந்தச் செய்தி தீபோல பரவி, அஜித் காதில் இந்தப் படத்தின் தலைப்பு போய் விழ, உடனே அமுதனின் போன் நம்பரை வாங்கி “ என்னை எவ்வளவு வேணுமானாலும் கிண்டல் பண்ணுங்க! ஒரு கிரியேட்டரா அது உங்க உரிமை! அதுக்காக தலவலி என்று தலைப்பு வைக்கணுமா? இந்தப் பட்டம் எனது ரசிகர்கள் எனக்கு பிச்ச போட்டது.
அதை கிண்டல் அடிச்சா அவங்க மனுசு நோகும் தல! கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க” என்றாராம் பணிவாக.
நெகிழ்ந்துபோன அமுதன் தலயின் பணிவில் ஆடிப்போய் இப்போது படத்தின் தலைப்பை ’இரண்டாவது படம்’ என்று மாற்றியிருகிறார்.
இந்தப் படத்தில் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்டையும் ஒரு ஹீரோவாக்கி தல அஜித்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருகிறார். ரிச்சர்ட், தவிர விமல், அரவிந்த் ஆகாஷ் ஆகியோரும் மற்ற இரண்டு ஹீரோக்கள்.
ஸ்க்ரீன் க்ராப்ட்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தரணி, தயாரிக்கும் இப்படத்திற்கு கண்ணன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு விஜய் உலகநாதன். விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

No comments:

Post a Comment