For Thala Thalapathy Fans



Sunday, August 21, 2011

சந்தோஷத்தில் விஜய் .......


* சந்தோஷத்தில் விஜய்
தனது 38வது பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாடிய சந்தோஷத்தில் இருக்கும் விஜயக்கு அடுத்து வரப்போகும் 'வேலாயுதம்' படம் நன்றாக வந்திருப்பதில் இரட்டிப்பு சந்தோஷமாம். 'காவலன்' படத்தில் லவ்வர் பாயாக நடித்ததால்தான் பெரியளவு வெற்றியைப் பெறவில்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் விஜய், அடுத்த தனது படங்கள் தனது ரசிகர்களுக்கு உற்சாகப்படுத்தும் படங்களாக ஆக்ஷன், சென்டிமென்ட், குத்துப்பாட்டு, பஞ்ச் டயலாக், அரசியல் நெடி போன்ற அம்சங்கள் உள்ள படங்களாக இருக்கும்' என்கிறார். அதற்கு உதாரணமாக 'வேலாயுதம்' படம் அமைந்திருக்கிறதாம். காமெடி, பஞ்ச் டயலாக், ஆக்ஷன் என மீண்டும் 'மாஸ் விஜய்'யை இந்தப் படத்தில் பார்க்கலாம் என்கிறார் இளையதளபதி. வழக்கமாக ஒவ்வொரு படம் ரிலீசாகும்போது தனது ரசிகர்களை சந்தித்து உற்சாகப்படுத்தும் விஜய், வேலாயுதம் ரிலீசுக்கு முதல்நாள் தனது ரசிகர்களுக்கு பிரமாண்ட விருந்து தரப்போவதாக தகவல்.

No comments:

Post a Comment