For Thala Thalapathy Fans



Sunday, August 21, 2011

நண்பன் சூட்டிங் ஓவர்:படக்குழுவினற்கு விருந்து வைத்த விஜய்....

"நண்பன்" பட சூட்டிங் முடிந்ததை அடுத்து, அப்படத்தில் பணியாற்றிவர்களுக்கு விருந்து வைத்து மகிழ்ந்திருக்கிறார் நாயகன் விஜய். பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற "3 இடியட்ஸ்" படத்தின் தமிழ் ரீ-மேக்கான, நண்பன் படத்தை டைரக்டர் ஷங்கர் இயக்குகிறார். இப்படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்.ஜே.சூர்யா, லாரன்ஸ் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள். நாயகியாக இலியானா நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

நண்பன் பட சூட்டிங் முடிவடைந்ததை அடுத்து, படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் 250 பேருக்கு ஹீரோ விஜய், தனது சொந்த செலவில் விருந்தளித்து மகிழ்ந்திருக்கிறார். சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த விருந்து நிகழ்ச்சி நடந்தது. சைவம் மற்றும் அசைவ உணவுகள் விருந்தில் பரிமாறப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மிமிக்ரி உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடந்தன. ஆட்டம் பாட்டம் என கலகலப்பாக நிகழ்ச்சி நிறைவடைந்தது.

No comments:

Post a Comment