For Thala Thalapathy Fans



Friday, August 19, 2011

விஜயுடன் மீண்டும் இணைகிறார் ராகவா லாரன்ஸ்

டைரக்டர் ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்து வரும் புதிய படம் "நண்பன்". இந்தியில் வெளியாகி பட்டையை கிளப்பிய "3 இடியட்ஸ்" படத்தின் ரீ-மேக்கான இப்படத்தில் நடிகர் ராகவா லாரன்சும் நடிக்கவிருக்கிறார். "காஞ்சனா" படத்தின் மூலம் ஒரு நல்ல நடிகராக தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட நடிகர் லாரன்ஸை, தயாரிப்பாளர்கள் பலர் மொய்த்துக் கொண்டிருக்க, அவரோ நண்பனில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம்.

ஷங்கர் கொடுத்த வாய்ப்பை மறுக்காமல் நண்பனில் இணைய தயாராகி விட்ட லாரன்ஸ், விரைவில் நண்பன் சூட்டிங்கில் பங்கேற்க உள்ளார். லாரன்சும், விஜய்யும் இதற்கு முன்பு திருமலை படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் "முனி 2" பட முடிவில், "முனி 3" தொடரும் என்று என்று போட்டிருக்கும் லாரன்ஸ், "முனி 3" படத்துக்கான வேலைகளிலும் சத்தமில்லாமல் இறங்கியிருக்கிறாராம். "முனி 3"க்கு முன்பு சில படங்களில் நடித்து, இன்னும் மெருகேறிய நடிப்புடன் "முனி 3"ஐ தொடர திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment