‘மங்காத்தா’ படத்தில் அஜீத் கெட்டவனாக நடிக்கிறார் என்று இயக்குனர் வெங்கட் பிரபு கூறினார். அஜீத்தின் 50-வது படமான இதில் அர்ஜுன், த்ரிஷா, அஞ்சலி, லட்சுமிராய், ஆண்ட்ரியா, பிரேம்ஜி நடிக்கின்றனர். படம் பற்றி நிருபர்களிடம் வெங்கட்பிரபு கூறியதாவது: இளம் நடிகர்களை வைத்து ‘சென்னை 28’, ‘சரோஜா’, ‘கோவா’ படங்களை இயக்கினேன். முன்னணி ஹீரோ படம் இயக்குவது எப்போது என்று நண்பர்கள் கேட்டனர். அதற்கான விடைதான் ‘மங்காத்தா’. அஜீத்திடம் கதை சொன்னேன். ஐந்து பேர் கெட்டவர்கள். ஒருவன் மட்டும் ரொம்ப கெட்டவன் என்றேன். அந்த ரொம்ப கெட்டவன் நீங்கள்தான் என்றேன். நடிக்க ஒப்புக்கொண்டார். இதில் அவர் இரு வேடங்களில் நடிக்கவில்லை. நடிப்பில் பிரமாதப்படுத்தி இருக்கிறார். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு கெட்டவன் ஒளிந்திருக்கிறான். வெளியே நல்லவன் மாதிரி வேடம் போடுகிறார்கள். அவர்கள் யார்? ஒருவரை மற்றவர் ஏமாற்றும்போது நடக்கும் பிரச்னைகளை விறுவிறுப்பான திரைக்கதையுடன் படமாக்கியுள்ளேன். இப்படத்தின் இன்னொரு ஹீரோ, யுவன்சங்கர் ராஜா. இவ்வாறு அவர் பேசினார். படம் பற்றி கங்கை அமரன், யுவன்சங்கர் ராஜா, வைபவ், ஜெயப்பிரகாஷ், அரவிந்த் ஆகாஷ், வாசுகி பாஸ்கர், பிரேம்ஜி உட்பட பலர் பேசினர். அடுத்த மாதம் ரிலீசாகிறது.
No comments:
Post a Comment