For Thala Thalapathy Fans



Monday, July 9, 2012

ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிய இளைய தளபதி ...


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் செலவில் இளைய தளபதி விஜய் நோட்டுபுத்தகங்கள், பரிசுகள் வழங்கினார்.
கடந்த பல வருடங்களாக இதுபோன்ற உதவிகளை இளையதளபதி விஜய் செய்து வருகின்றார்.


இந்த ஆண்டும் 200 குழந்தைகளுக்கு ரூ. 10 லட்சம் கல்வி உதவித்தொகையும் 5 லட்சம் ஏழை மாணவ- மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கினார்.
அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இந்த கல்வி உதவித்தொகையை விஜய் வழங்கினார்.


புதுச்சேரியில் கடந்த 10, 12 வகுப்புகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ- மாணவிகளுக்கும் தமிழ் பாடத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ- மாணவிகளுக்கும் வெள்ளிப்பதக்கம், கேடயம், சால்வை அணிவித்து அவர்களை கௌரவப்படுத்தினார் இளைய தளபதி.


பின்னர் அம்மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நன்றாக படித்து பெரிய பொறுப்புக்களுக்கு வரவேண்டுமென அவர்களிடம் கேட்டுக்கொண்டார்.


இதுதவிர தளபதி விஜய்யின் வேண்டுகோளுக்கிணங்க ஏழை- எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் அனைத்து உதவிகளையும் அனைத்து மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், இளைய தளபதி மக்கள் இயக்க தொண்டர்கள் செய்து வருகின்றனர்.
 

No comments:

Post a Comment